மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தவறாக பயன்படுத்தப்படும் பிசினஸ் விசா.. சீனர்களை வெளியேற்ற கோரி மனு

Google Oneindia Tamil News

மும்பை: பிசினஸ் விசா என்ற பெயரில் சீனா மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை பதம்பார்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நாசர் கோலி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஹாங்காங் போன்ற நாடுகளில் நிறுவனங்களை வைத்துக் கொண்டு, இந்தியாவில் அளிக்கப்படும் சலுகைகளை பயன்படுத்துவதற்காக பி 1 என்ற பிசினஸ் விசாவில் சீனர்கள் அதிகம் இந்தியா வந்து, தொழில் சீர்குலைவை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

China Mobile manufacturers have been Misuse of business visa

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதாயம் அடைந்துள்ளன. இங்குள்ள நிறுவனங்களுடன் கூட்டு வைத்து கொண்டு தவறான வழியில் செல்வதாகவும் கூறியுள்ளார். பசிபிக் சைபர் டெக்னாலஜி என்ற நிறுவனம் வாயிலாக 180 நாட்கள் வரை அனுமதியுள்ள பிசினஸ் விசாவில் 60 சீன நிபுணர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிநவீன இயந்திரங்களை பார்வையிட்டு விட்டு, அதனை இயக்குவதற்கான பயிற்சியையும் பெற்றுச் செல்வதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், விசா காலம் முடிந்த சீனர்கள் உடனே இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

English summary
China Mobile manufacturers have been Misuse of business visa FRRo asked to them leave india
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X