மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மும்பையின் கொலபாவில் கொட்டித் தீர்த்த மழை.. ஒரே நாளில் 331 மிமீ.. 46 ஆண்டுகள் கழித்து அதிக மழை பதிவு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாவட்டத்தில் கோலபாவில் கடந்த 24 மணி நேரத்தில் 331 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இது 46 ஆண்டுகளில் இல்லாத மழையின் அளவாகும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அளவில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இதனால் மும்பையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி முதல் கனமழை கொட்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் மும்பையில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் பொத்துக் கொண்டு ஊற்றிய வானம்.. இந்திய அளவில் புதிய சாதனை.. அவலாஞ்சியில் 58 செ.மீ மழை நீலகிரியில் பொத்துக் கொண்டு ஊற்றிய வானம்.. இந்திய அளவில் புதிய சாதனை.. அவலாஞ்சியில் 58 செ.மீ மழை

மருத்துவமனை

மருத்துவமனை

இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. மருத்துவமனைகளில் வெள்ள நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் கொலபாவில் 331.8 மி.மீ. மழை பதிவானது. மும்பையில் 12 கொலபா பகுதியில் 293.8 மி.மீ. மழை பதிவானது.

கனமழை

கனமழை

ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 46 ஆண்டுகளில் மும்பை தென் பகுதியில் பெய்த மழைகளிலேயே அதிகமான மழை இதுதான். கடந்த 1974ஆம் ஆண்டு மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையின் 64 சதவீதம் வெறும் 5 நாட்களிலேயே பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

பலத்த காற்று

பலத்த காற்று

மும்பையில் கடலில் 4.33 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்தன. தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. ராய்காட் மாவட்டத்தில் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் நேற்று பலத்த காற்று வீசியதில் 3 ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மழை நீடிக்கும்

மழை நீடிக்கும்

மும்பையில் நாயர் மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்ததால் அங்கு நோயாளிகள் கடும் அவதியடைகிறார்கள். மணிக்கு 107 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அடுத்த சில மணி நேரங்களுக்கும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Colaba in Mumbai received 331 mm in last 24 hours. It is the highest one in the last 46 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X