மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோனியாவை இழிவுபடுத்திய விவகாரம்- அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை

Google Oneindia Tamil News

மும்பை: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்திய விவகாரம் தொடர்பாக ரிபப்ளிக் டிவி உரிமையாளரும் செய்தி ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recommended Video

    அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல்..வீடியோ வெளியிட்ட அர்னாப்

    மகாராஷ்டிராவின் பால்கரில் சாதுக்கள் இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். குழந்தை திருடும் கும்பல் என சந்தேகித்து சாதுக்கள் இருவரும் அடித்து படுகொலை செய்யப்பட்டனர்.

    Comments against Sonia: Arnab Goswami interrogation by Mumbai Police

    இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்திருந்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பால்கர் சம்பவத்தின் பின்னணியில் எந்த ஒரு மதமோதலும் இல்லை என கூறியிருந்தார். இது தொடர்பாக தமது ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி விவாதம் ஒன்றை நடத்தினார்.

    இந்த விவாதத்தின் போது தேவை இல்லாமல் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவை இழிவுபடுத்தும் வகையில் அர்னாப் கோஸ்வாமி பேசியிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அர்னாப் மீது நாட்டின் பல மாநிலங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

    திருச்சி-இலங்கை விமான சேவை மே 15 வரை ரத்து.. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு திருச்சி-இலங்கை விமான சேவை மே 15 வரை ரத்து.. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு

    அதேநேரத்தில் தம் மீது சோனியாவின் தூண்டுதலில் தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அர்னாப். மேலும் அர்னாப் கோஸ்வாமி தம்மை போலீசார் கைது செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றமும் அர்னாப் கோஸ்வாமிய 3 வார காலம் கைது செய்யாமல் இருக்க தடை விதித்தது.

    இந்நிலையில் இன்று காலை மும்பை என்.எம்.ஜோஷி மார்க் போலீஸ் ஸ்டேஷனில் அர்னாப் கோஸ்வாமி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது தமது ரிபப்ளிக் டிவி செய்தியாளர்களிடம் பேசிய அர்னாப் கோஸ்வாமி, உண்மை வெல்லும் என கூறினார்.

    English summary
    Republic Editor Arnab Goswami was interrogation by Mumbai Police in Comments against Sonia case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X