மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக எம்எல்ஏ பேட்டால் அடித்தார்.. காங். எம்எல்ஏ வாளியால் அடிக்கிறார்.. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக எம்எல்ஏ பேட்டால் அடித்தார்.. காங். எம்எல்ஏ வாளியால் அடிக்கிறார்-வீடியோ

    மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்த அரசு என்ஜினியர் மீது காங்கிரஸ் எம்எல்ஏ நிதிஷ் நாராயன் ராணே சேற்றை ஊற்றியதுடன், தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது .

    மும்பை அருகே கன்காவ்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதிஷ் நாராயன் ராணே. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான .இவர் மறைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணேவின் மகன் ஆவார். இந்நிலையில் கன்காவ்லி அருகே மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்று பாலத்தை அரசு என்ஜினியர் பிரகாஷ் ஷேதேகர் ஆய்வு நடத்த வந்தார்.

     Cong MLA Nitesh Narayan Rane throw mud on engineer at Mumbai-Goa highway

    இந்த தகவலை அறிந்த எம்எல்ஏ நிதீஷ் தனது ஆதரவாளர்களுடன் சென்று அரசு என்ஜினியரை தனது தொகுதியில் சாலைகள் சரியில்லை என முற்றுகையிட்டார். அப்போது எம்எல்ஏ மற்றும் என்ஜினியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ மற்றும் அவரது ஆட்கள் என்ஜினியர் மீது வாளி நிறைய சேற்றை ஊற்றியதுடன், அடித்து உதைத்து பாலத்தில் கட்டி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக மும்பையின் போத்தலெஸ்- ரிட்டன் நெடுஞ்சாலை மிக மோசமாக இருப்பதாகவும், மக்கள் செல்வதற்கே லாயக்கே இல்லை என்றும் புகார்கள் வந்ததால் என்ஜினியர் ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் தான் ஆற்று பாலத்தில் ஆய்வு நடத்தி உள்ளார். அப்போது தான் என்ஜினியர் பிரகாஷ் ஷேதேகர் தாக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக இந்தூரில் பாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை பேட்டால் தாக்கிய பரபரப்பு ஏறபட்டது. இப்போது மும்பையில் காங்கிரஸ் எமஎல்ஏ அரசு என்ஜினியர் மீது சேற்றை ஊற்றி தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Congress MLA Nitesh Narayan Rane and his supporters throw mud on engineer Prakash Shedekar at a bridge near Mumbai-Goa highway in Kankavali
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X