மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க காங்.க்கு தார்மீக உரிமை இல்லை- தொடரும் சஞ்சய் நிருபத்தின் எதிர்ப்பு!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரத்தில் புதிய அரசை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க பாஜகவை ஆளுநர் கோஷ்யாரி அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தெரிவித்துவிட்டது. இதையடுத்து 2-ஆவது மிகப் பெரிய கட்சியான சிவசேனாவை அழைத்தார்.

90ஸ் கிட் பேச்சை கேட்டு அசிங்கப்பட்ட சிவசேனா.. மகாராஷ்டிராவில் தனித்துவிடப்பட்டது.. இந்த நிலையா!90ஸ் கிட் பேச்சை கேட்டு அசிங்கப்பட்ட சிவசேனா.. மகாராஷ்டிராவில் தனித்துவிடப்பட்டது.. இந்த நிலையா!

தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸ்

அந்த கட்சிக்கு நேற்று வரை கெடு விதித்த நிலையில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை சிவசேனா கொடுக்கவில்லை என்பதால் 3-ஆவது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழைத்துள்ளார்.

ஒத்துழைக்கவில்லை

ஒத்துழைக்கவில்லை

இந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது. ஆனால் இதற்கு இரு கட்சிகளும் ஒத்துழைக்கவில்லை. சிவசேனாவுடன் கூட்டணிக்கு புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் ஓகே சொன்ன நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், அது பேரழிவை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

தார்மீக உரிமை

தார்மீக உரிமை

காங்கிரஸ் ஆதரவு அளித்திருந்தால் தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்திருக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து சஞ்சய் நிருபம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சியை உருவாக்க காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமையேதும் இல்லை.

தோல்வி

மாநிலத்தில் நிலவும் நிலையற்றத்தன்மைக்கு எங்களை குறை கூறுவது அர்த்தமில்லாத செயல். மாநிலத்தை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு கொண்டு சென்றது பாஜக, சிவசேனாவின் தோல்வியாகும் என்று சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.

English summary
Sanjay Nirupam tweets that Congress has no moral responsibility to form a govt in Maharashtra. Putting any blame on us for the instability is meaningless. Its the failure of BJP and ShivSena which has brought the state on the doorstep of President rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X