மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் எங்கள் வியூகத்தை அறிவிப்போம்: சிவசேனாவின் சஞ்சய் ராவத்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் எங்கள் கட்சியின் வியூகத்தை அறிவிப்போம் என சிவசேனா மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக சட்டசபை குழு தலைவர் தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். 105 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார்

 பாஜகவுடன் மல்லுக்கட்டு... உத்தவ் தாக்கரே உக்கிரமானதுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இவுகதானாம் பாஜகவுடன் மல்லுக்கட்டு... உத்தவ் தாக்கரே உக்கிரமானதுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இவுகதானாம்

பெரும்பான்மையை நிரூபிக்குமா?

பெரும்பான்மையை நிரூபிக்குமா?

சிறிய கட்சிகள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக முயற்சிகளை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்கின்றன சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்.

காங். எதிரி அல்ல

காங். எதிரி அல்ல

பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் ஆட்சி அமைக்க முயற்சிப்போம் என்கிறது தேசியவாத காங்கிரஸ். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஒன்றும் மகாராஷ்டிராவுக்கு எதிரி அல்ல. சில பிரச்சனைகளில் கட்சிகளுக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கத்தான் செய்யும் என்று சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா கூட்டணி ஆட்சி?

சிவசேனா கூட்டணி ஆட்சி?

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கும் கருத்து முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆளுநர் அழைப்புக்கு வரவேற்பு

ஆளுநர் அழைப்புக்கு வரவேற்பு

முன்னதாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவ்வத், பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைத்திருப்பதை வரவேற்கிறோம். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பாஜகவுக்கு கேள்வி

பாஜகவுக்கு கேள்வி

ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தால் தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணிநேரத்துக்குள் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோராதது ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போதைய நிலையில் பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருக்கிறார்.

சிவசேனாவின் வியூகம்

சிவசேனாவின் வியூகம்

பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் எங்கள் கட்சியின் வியூகம் என்ன என்பதை வெளிப்படுத்துவோம். எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்த இருக்கிறார் என்றார்.

English summary
Shiv Sena Senior leader Sanjay Raut said that Congress is not the enemy of the Maharashtra State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X