மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்... என்சிபி கேட்கவே இல்லை: காங். மூத்த தலைவர் மாணிக்ராவ் தாக்கரே

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் உதயமாகும் கூட்டணி ஆட்சி!| Shiv Sena, NCP, and Congress will form the new alliance

    மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்குதான் முதல்வர் பதவி என முடிவு செய்யப்பட்டுள்ளது; தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஒருபோதும் முதல்வர் பதவியை கேட்கவே இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    மும்பையில் என்சிபி-காங்கிரஸ்- சிவசேனா இணைந்து ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ்-என்சிபி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    Congress leader Manikrao Thakre: It is almost final that the

    இந்த ஆலோசனை முடிந்த நிலையில் மும்பையில் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் என்சிபி-காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்ராவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    மேலும், என்சிபி சார்பில் முதல்வர் பதவி கேட்டு நிபந்தனை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை; என்சிபி ஒருபோதும் முதல்வர் பதவியை கேட்டது இல்லை எனவும் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.

    உள்ளாட்சி தேர்தலுக்கும் மாவட்டங்களை பிரிப்பதற்கும் தொடர்பா? என்ன பின்னணி?.. முதல்வர் விளக்கம்!உள்ளாட்சி தேர்தலுக்கும் மாவட்டங்களை பிரிப்பதற்கும் தொடர்பா? என்ன பின்னணி?.. முதல்வர் விளக்கம்!

    இதனால் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் என்கிற அக்கட்சியின் நிலைப்பாடு நிறைவேறும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    English summary
    Congress Senior leader Manikrao Thakre said that the next Maharashtra Chief Minister will be from Shiv Sena. NCP has never demanded the position of Chief Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X