மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவசேனா-காங். ஆட்சி அமைத்தால் அடுத்த ஆண்டே தேர்தல் வரும்... தொடரும் சஞ்சய் நிருபம் கலகக் குரல்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரத்தில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க உதவினால் முன்கூட்டியே வரும் 2020-இல் சட்டசபை தேர்தலை இந்த மாநிலம் நிச்சயம் சந்திக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் 105 இடங்களை பெற்றுள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பாஜகவோ தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என கூறிவிட்டது.

Congress leader Sanjay Nirupam get ready for early elections in 2020

இதையடுத்து சிவசேனாவை ஆட்சி அமைக்க கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். அக்கட்சிக்கு இன்று வரை கெடு விதித்த்துள்ளார். இந்த நிலையில் மும்பை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா பாஜக சிவசேனா ஆட்சி அமைக்காவிட்டால் என்சிபி- காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என கூறயிருந்தார்.

இவரது கருத்து சஞ்சய் நிருபம் நேற்றைய தினம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சஞ்சய் நிருபம். இவர் கடந்த ஏப்ரலில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து ஆட்சி அமைக்க முடியாது.

எந்த சூழலிலும் சிவசேனாவுடன் அதிகாரப்பகிர்வு செய்யக் கூடாது. அது பேரழிவை ஏற்படுத்தும் என கூறியிருந்தார். இந்த நிலையில் சஞ்சய் நிருபம் இன்று தனது ட்விட்டரில் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் யார் ஆட்சியை அமைப்பார்கள் எப்படி அமைப்பார்கள் என்பதெல்லாம் விஷயமே அல்ல. ஆனால் மகாராஷ்டிரத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை இருக்க முடியாது என்பதை மறுப்பதற்கில்லை.

வெயிட் பண்ணுங்க.. மீட்டிங் முடிச்சிட்டு பேசலாம்.. சிவசேனாவை அலைய விடும் சரத் பவார்!வெயிட் பண்ணுங்க.. மீட்டிங் முடிச்சிட்டு பேசலாம்.. சிவசேனாவை அலைய விடும் சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் முன் கூட்டியே சட்டசபை தேர்தல் சந்திக்க தயாராகுங்கள். சிவசேனாவுடன் கூட்டணி வைத்து கொண்டு நாம் தேர்தலை சந்திப்போமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Congress Senior Leader Sanjay Nirupam says that No matter who forms govt and how ? But the political instability in Maharashtra can not be ruled out now. Get ready for early elections. It may take place in 2020. Can we go to the elections with ShivSena as partner ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X