மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களைகட்டும் மகாராஷ்டிர தேர்தல்.. பாஜகவை முந்திக்கொண்ட காங்.. 51 வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அடுத்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதே மாதம் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கட்சிகள் எல்லாம் தற்போது மிக தீவிரமாக தயாராகி வருகிறது.

Congress releases the first list candidates for Maharashtra Assembly elections

லோக்சபா தேர்தலுக்கு பின் இந்த தேர்தல் நடப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாஜகவின் 100 நாள் ஆட்சிக்கு மார்க் போடும் தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்த 100 நாட்களில் முத்தலாக் தடை சட்டம் தொடங்கி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் வரை பல அதிரடி விஷயங்கள் நடந்துள்ளது.

இதனால் இந்த தேர்தல் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக பாஜக சார்பாக தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது பாஜகவை காங்கிரஸ் முந்திக்கொண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 51 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளது. இதில் 51 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமித் தேஷ்முக் விஸ்வஜித் கதம் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

English summary
Congress releases the first list candidates for the upcoming Maharashtra Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X