மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் இருக்குதாம்.. சொல்கிறார் மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

மும்பை: விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சீனாவும், பாகிஸ்தானும் இருப்பதாக மத்திய அமைச்சர் ரோசாஹேப் டான்வே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய முற்படும் விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பின்னால் சீனாவும் பாகிஸ்தானும் இருக்கிறது.

Conspiracy Of China, Pakistan behind farmers protests, says Union Minister Raosaheb Danve

குடியுரிமை சட்டம் (சி.ஏ.ஏ) மற்றும் குடிமக்கள் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகிய விவகாரங்கலில், முஸ்லிம்கள் முன்னர் தவறாக வழிநடத்தப்பட்டனர். அந்த முயற்சிகள் வெற்றிபெறாததால், இப்போது விவசாயிகளை தூண்டி விட்டு போராடச் செய்துள்ளனர் என்று டான்வே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தின் பத்னாபூர் தாலுகாவில் உள்ள கோல்டே தக்லியில் நடைபெற்ற சுகாதார மையத்தின் தொடக்க விழாவில் டான்வே இவ்வாறு கூறியுள்ளார்.

முஸ்லீம்களிடம் என்ன கூறப்பட்டது? என்.ஆர்.சி வருகிறது, சி.ஏ.ஏ வருகிறது, முஸ்லிம்கள் ஆறு மாதங்களில் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றனர். ஆனால் ஒரு முஸ்லீமாவது வெளியேறினாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விவசாயிகள் போராட்ட பின்னணியில் பாகிஸ்தான்,சீனா... மத்திய இணை அமைச்சரின் கருத்தால் வெடித்த சர்ச்சை..!விவசாயிகள் போராட்ட பின்னணியில் பாகிஸ்தான்,சீனா... மத்திய இணை அமைச்சரின் கருத்தால் வெடித்த சர்ச்சை..!

"முஸ்லீம்களை திசை திருப்ப நடந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை, இப்போது விவசாயிகளை விவசாயத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று வதந்தி கிளப்பியுள்ளனர். இது சதி" என்றார்.

English summary
Union minister Raosaheb Danve on Wednesday claimed that China and Pakistan were behind the ongoing protests by farmers, who are seeking repeal of three new farm laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X