மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா வந்த வெளிநாட்டு பயணிகள் 6 பேருக்கு கொரோனா.. ஓமிக்ரான் பாதிப்பா என்று சோதனை

Google Oneindia Tamil News

மும்பை: தென்னாப்பிரிக்கா உள்ளிட ஆபத்து பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து மும்பை வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், ஓமிக்ரான் அச்சம் காரணமாக சோதனை மாதிரிகள் ஜீன் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக அச்சத்தில் இருந்த உலக நாடுகள் சற்று நிம்மதியடைந்திருந்த நிலையில், ஆல்ஃபா, டெல்டா வகை வைரஸ் அச்சம் ஏற்பட்டது. தொடர்ந்து பல திரிபுகளையடைந்த வைரஸுக்கு தற்போது ஓமிக்ரான் என பொதுப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் பல்வேறு திரிபுகளுடன் அதிக வேகத்தில் பரவி வருகிறது.

Corona detected in 6 travelers from countries including South Africa in Maharashtra

மேலும், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் காரணமாக உலகநாடுகளை பீதியடைய வைத்துள்ள இந்த வைரஸ் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவி விட்டது.இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆபத்து பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட ரிஸ்க் பட்டியலில் உள்ள 6 நாடுகளில் இருந்து மஹராஷ்டிரா மாநிலத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா உறுதி செய்யபட்டுள்ள 6 பேருக்குமே அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகள் உள்ளதாகவும், அவர்களுக்கு ஓமிக்ரான் திரிபு வைரஸ் பாதிப்புள்ளதா எனக் கண்டறிய சோதனை மாதிரிகள் ஜீன் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் தற்போது நடைபெற்று வருவதாக மஹராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறு பேரில் மூன்று பேர் மும்பை, கல்யாண்-டோம்பிவலி மற்றும் மீரா-பயந்தர் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நான்காவது நபர் புனேவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், நைஜீரியாவில் இருந்து வந்த மேலும் இருவர் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல், இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் ஆபத்து பட்டியலில் உள்ள' நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை விதிகளை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்! தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்!

Recommended Video

    Omicron தமிழகத்தில் இருக்கிறதா? | Ma Subramanian | Tamilnadu | Oneindia Tamil

    இந்நிலையில், சென்னை விமான நிலையில் ஆபத்து பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும், சோதனையில் தொற்று இல்லையெனினும் தனிமைப்படுத்தவர், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், இருப்பினும் அவர்கள் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்காமல் விமான நிலையத்திலிருந்து வெளியேறலாம்.

    English summary
    While the impact of Omigran has caused great fear in India, corona has been confirmed for 6 people who came to Maharashtra from countries including South Africa. Samples have been sent for gene analysis due to fears of Omigron.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X