மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா செல்ல ரெடியாக நிற்கும் ஏர் இந்தியா விமானம்.. உத்தரவிட்டதும் கிளம்பும்! கொரோனா கொடுமைதான் காரணம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள்

    மும்பை: கொரோனா வைரஸ் ஏற்கனவே சீனாவின் வுஹான் நகரில், 81 பேரின் உயிரைப் பறித்த நிலையில், அங்கு வசிக்கும், இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவர, ஏர் இந்தியா, போயிங் 747 ஜெட் விமானத்தை தயாராக வைத்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க, அந்த நகர நிர்வாகம் முழு நகரத்தையும் சீல் வைத்துள்ளது.

    சீனாவில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஜெட் விமானத்தை கிளப்பலாமா என்பது குறித்து அரசாங்கம் அறிவித்ததும், கிளம்புவதற்கு, விமானம் ரெடியாக இருப்பதாக, ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Corona virus outbreak: Air India jet on standby to evacuate Indians

    இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், 137 விமானங்களில் பயணித்த, 29,700 க்கும் மேற்பட்ட பயணிகளை அதிகாரிகள், சோதனை நடத்தியுள்ளனர். இதுவரை நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவைகொரோனா வைரஸை தடுக்க முடியுமா? நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை

    சுகாதார அமைச்சகம் ட்வீட்படி, "137 விமானங்களில் இருந்து மொத்தம் 29,707 பயணிகள் சோதித்து பார்க்கப்பட்டனர். 22 விமானங்களில் பயணித்த, 4,359 பயணிகள் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இன்றுவரை கொரோனா வைரஸ் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    ஏழு பயணிகளின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்-என்.ஐ.வி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    திரிசூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா மற்றும் மலப்புரம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூன்று பேரும் கேரளாவின் பல்வேறு சுகாதார மையங்களின் தனிமை வார்டுகளில் உள்ளனர்.

    சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.

    English summary
    Air India has kept a Boeing 747 jet on standby for the evacuation of Indians in China's Wuhan city where the coronavirus outbreak has already claimed the lives of 81 people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X