மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவுக்கு 7வது நபர் பலி.. குஜராத்தில் முதல் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயது முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்த நிலையில், இன்று காலை பீகார் மாநிலம் பட்னாவில் 38 வயது நபரும் உயிரிழந்துள்ளார். இதேபோல் குஜராத்தின் சூரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 340 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிவரப்படி 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 7 பேரில் 6 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கு முன்பு ரத்த அழுத்தம்,. சிறுநீரக தொற்று உள்பட பல்வேறு உடல் பாதைகள் இருந்தது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளனர், தற்போது உயிரிழந்த நபருக்கு 38 வயது தான் ஆகிறது.

coronaravirus killed 5 in india. A 63-year-old COVID19 patient succumbed to illness last night in Maharashtra

முன்னதாக முதல்முதலாக கர்நாடகாவில் 76வயது முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். அதன்பிறகு டெல்லியில் 69வயது மூதாட்டி உயரிழந்தார். தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒரு முதியவரும், பஞ்சாபில் ஒரு முதியவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் மும்பையில் இன்று புதிதாக 63 வயது முதியவர் உயிரிழந்தார். அதன்பிறகு கத்தாரில் இருந்து அண்மையில் இந்தியா வந்த 38 வயது நபர் பாட்னாவில் இன்று உயிரிழந்துள்ளார். இதேபோல் இன்று மாலை குஜராத் மாநிலம் புனேவில் 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் 6 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர்.

coronaravirus killed 5 in india. A 63-year-old COVID19 patient succumbed to illness last night in Maharashtra

கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் இந்தியாவில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
A 63-year-old COVID19 patient succumbed to illness last night. The patient who tested positive for Coronavirus had a chronic history of diabetes, high blood pressure and ischemic heart disease: Public Health Dept, Mumbai, Maharashtra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X