மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசியாவின் பெரிய குடிசை பகுதி.. சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்ற தாராவி.. எப்படி நடந்தது?

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மும்பையின் குடிசை பகுதியான தாராவி சத்தமே இல்லாமல் வென்று இருக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதிதான் முதல் கொரோனா கேஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதே நாளில் அங்கு கொரோனா காரணமாக மரணமும் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய பாதிப்பு வேகமாக வேகமாக அதிகரித்தது.

மும்பை போன்ற பெருநகரங்கள் கூட கொரோனாவிற்கு எதிராக திணறியது. இதனால் தாராவி மிக மோசமாக கொரோனாவிற்கு பாதிப்பு அடையும் என்று கருதப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா உறுதி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா உறுதி

எங்கே வந்தது

எங்கே வந்தது

முதலில் அங்கு பலிகா நகர் என்று மக்கள் குறைவாக வசிக்கும் இடத்தில் கொரோனா வந்தது. ஆனால் போக போக அங்கு கேஸ்கள் அதிகரித்து முகுந்த் நகர் போன்ற அதிக நெருக்கடியாக குடிசை பகுதியிலும் கூட கொரோனா வந்தது. 10க்கு 10 வீட்டில் 5-7 பேர் வசிக்கும் நெருக்கடியான இடத்தில் கொரோனா வந்தது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அலெர்ட் ஆன மாநில அரசு உடனடியாக அங்கு பணிகளை தொடங்கியது.

சாலைகளை மூடல்

சாலைகளை மூடல்

உடனடியாக அங்கு சாலைகள் எல்லாம் மூடப்பட்டது. 48 மணி நேரத்தில் தாராவியின் அனைத்து தெருக்களும் மூடப்பட்டது. அங்கு இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் மருந்து அடிக்கப்பட்டது. 425 பொது கழிப்பிடங்கள் மொத்தமாக சுத்தப்படுத்தப்பட்டது. வீடு வீடாக சோதனையை தொடங்கி அரசு செய்தது. முதல் கட்டமாக தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது.

வீடு வீடாக சோதனை

வீடு வீடாக சோதனை

தாராவி முழுக்க வீடு வீடாக சோதனை செய்யப்பட்டது. மொத்தம் 8.5 லட்சம் பேர் அங்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்று screening செய்யப்பட்டார்கள். இதற்காக பெரிய அளவில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சோதனைகளை செய்தனர். அதேபோல் இதற்காக அங்கு 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கட்டது.

வேகமான சோதனை

வேகமான சோதனை

அங்கு சோதனைகள் வேகமாக வேகமாக செய்தது முக்கிய காரணம் ஆகும் . கொரோனா சோதனைகள் அறிகுறி இருக்கும் எல்லோருக்கும் செய்யப்பட்டது. அதேபோல் கொரோனா உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்ட எல்லோருக்கும் சோதனை செய்யப்பட்டது. இந்த கொரோனா அறிகுறி இல்லாமல் பரவ கூடியது. அதனால் அறிகுறி இல்லாத பல நபர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

கொரோனா உள்ளவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள். கொரோனா உள்ளவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் உடன் தொடர்பு கொண்டவர்கள் ஆகியோர் மட்டும்தான் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்படி தனிமைப்படுத்தப்பட்ட எல்லோரும் முறையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காணுதல். டெஸ்ட் செய்து உடனே முடிவுகளை வெளியிடுதல். மக்களை தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சை அளிப்பது, என்று அரசு அணு துரிதமாக செயல்பட்டது .

காண்டாக்ட் டிரேசிங்

காண்டாக்ட் டிரேசிங்

அதிலும் அங்கு காண்டாக்ட் டிரேசிங் செய்வதில் தாராவி நிர்வாகம் மிக தீவிரமாக கவனம் செலுத்தியது. இந்த கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது எளிதாக பரவும். இதனால் இந்த வைரஸ் தாக்குதல் யாருக்கு இருக்கோ அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அங்கு நான்கு முதல் 5 அடக்கு காண்டாக்ட் ட்ரெஸிங் கூட செய்யப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

எத்தனை கேஸ்கள்

எத்தனை கேஸ்கள்

நேற்று வரை தாராவியில் 2158 கேஸ்கள் மட்டுமே வந்துள்ளது. மகாராஷ்டிராவின் மற்ற இடங்களை விட இது குறைவுதான். அங்கு தினசரி கேஸ் அதிகரிப்பு 1.57% ஆக உள்ளது. மாநிலத்தின் கேஸ் அதிகரிப்பு 3.2% ஆக உள்ளது. அங்கு மே 30ம் தேதியில் இருந்து ஜூன் 8 வரை பலி எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. அதன்பின் 7 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 79 பேர் பலியாகி உள்ளனர்.

செம கட்டுப்பாடு

செம கட்டுப்பாடு

2400 சதுர கிலோ மீட்டர் பகுதிக்கு இருக்கும் மிகப்பெரிய குடிசை பகுதி ஆகும் இது . அங்கு கொரோனா மோசமாக வரும் என்று நினைக்கப்பட்ட நிலையில் மொத்தமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் அங்கு ஒற்றை இலக்கத்தில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. அதேபோல் அங்கு கேஸ்கள் இரட்டிப்பாகும் எண்ணிக்கை 18 நாட்களில் இருந்து 78 நாட்களாக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில்

மகாராஷ்டிராவில்

மகாராஷ்டிராவில் இரட்டிப்பாகும் எண்ணிக்கை 34 நாட்களாக உள்ளது. மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி சத்தமே இல்லாமல் கொரோனாவை வென்று இருக்கிறது. தற்போது தாராவியில் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு யோசனை செய்து வருகிறது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை பார்த்து ஒடுங்கி வரும் நிலையில் அமைதியாக தாராவி கொரோனாவை ஒடுக்கி உள்ளது.

English summary
Coronavirus: Asia's largest slum Dharavi wins the pandemic silently
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X