மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் தாராவி.. மிரட்டும் கொரோனா.. பழைய "பார்முலா"வை கையில் எடுக்கும் மும்பை..!

: தாராவியில் மீண்டும் தொற்று அதிகமாகி வருகிறது

Google Oneindia Tamil News

மும்பை: கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெறும் 33 கேஸ்கள் மட்டுமே இருந்த நிலையில், ஏப்ரல் 19 நிலவரப்படி தாராவியில் 893 கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன.

இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது... இப்போது மட்டுமல்ல, கடந்த வருடமும் இதே மகாராஷ்டிரா தான் நாட்டையே மிரட்டியது.. இந்த மராட்டியத்தில் மட்டும் கடந்த சில தினங்களாக 60- ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் நோய் தொற்று மறுபடியும் வேகமாக பரவி வருகிறது... இதன்மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து நிற்கிறது.

39 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடல்! 39 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடல்!

கேஸ்கள்

கேஸ்கள்

கடந்த 2021 பிப்ரவரி 24-ம்தேதி வெறும் 33 ஆக இருந்த தொற்று, ஏப்ரல் 19ம் தேதி நிலவரப்படி 893 ஆக அதிகரித்துள்ளன. எனினும், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 30க்கும் குறைவாகவே இருந்தது.. புதிய கேஸ்கள் எதுவும் பதிவாகவில்லை..

 சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

கடந்த பிப்ரவரி 24ம் தேதி, ஒரேநாளில் 10 கொரோனா கேஸ்கள் பதிவாகின.. உடனடியாக இவர்களுக்கு டெஸ்ட்களும் ஆரம்பமாயின.. வெப்பநிலை, ஆக்ஸிஜன், ஒன்பது பிஎம்சி மருந்தகங்கள், கிளினிக்குகள், லேப்கள், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், டெஸ்ட்களை தொடர்ந்து நடத்துதல், என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டன.

 அதிகரிப்பு

அதிகரிப்பு

இதுகுறித்து, அந்த பகுதியின் வடக்கு வார்டின் உதவி நகராட்சி ஆணையர் கிரண் திகாவ்கர் சொல்லும்போது, "கடந்த ஜனவரி மாசம், ஒரு நாளைக்கு 10 முதல் 15 டெஸ்ட்கள் இருந்தன.. இது நாளடைவில் ஒரு நாளைக்கு 100 க்கு மேல் அதிகரிக்கப்பட்டது... தாராவியில் டெஸ்ட் செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறி இல்லாமல் தான் இருந்தது. எனினும், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இந்த தாராவியில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, மக்களை தனிமைப்படுத்தி பாதுகாக்க வேண்டி இருந்தது.

 நடவடிக்கை

நடவடிக்கை

லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களையும் தனிமைப்படுத்த வேண்டி உள்ளது.. இதற்காக ஏழு மாடி, 23 ரூம்கள் கொண்ட ஒரு மறுவாழ்வு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறோம்.. கடந்த வருடம் எத்தனையோ பேர் தாராவியை விட்டு வெளியேறினார்கள்.. அவர்களில் பலர் இங்கு திரும்பி வந்துள்ளனர்... 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இங்குள்ள தோல் பேக்டரியில் நிறைய பேர் வேலை பார்த்தும் வருகின்றனர்..

தடுப்பூசி

தடுப்பூசி

எனினும் கடந்த வருடம் போல நிலைமை மோசமாக இல்லை.. ரயில் சேவைகள் தற்போது இயங்குவதால், ஆயிரக்கணக்கானோர் தாராவியில் இருந்து ஒவ்வொரு நாளும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.. என்னதான், கடந்த வருடம் போல ஆபத்து இல்லை என்றாலும், தடுப்பூசி அதிகரிப்பதே தாராவியில் நோக்கம் என்று பிஎம்சி அதிகாரிகள் உறுதிபட சொல்கிறார்கள்..

 வசதிகள்

வசதிகள்

தாராவியில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட 60 அடி சாலையில் மிகவும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7775 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது.. எனினும், தடுப்பூசி போட தொடங்கிய நாட்களில் இருந்து இதுவரை பெரிய அளவில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.. தினமும் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தான் வர மறுக்கின்றனர் என்ற புகாரும் கிளம்பி உள்ளது.

English summary
Coronavirus: covid cases in Dharavi BMC returns to last years strategy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X