மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாத்ரூமில் ஒளிந்து கொண்டார்.. காசு கொடுத்தார்.. கனிகா கபூர் கொரோனா சோதனையில் தப்பியது எப்படி?

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மும்பை விமான நிலையத்தில் கொரோனா சோதனையில் இருந்து தப்பியது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் பாடகி கனிகா கபூர் மும்பை விமான நிலையத்தில் கொரோனா சோதனையில் இருந்து தப்பியது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

    எல்லைகளை மூடிய தமிழக அரசு... ஏன் தெரியுமா?

    பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மூலம் பெரிய தலைவர்கள் அரசியல்வாதிகள் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இவர் கலந்து கொண்ட பார்ட்டிகள் மூலம் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மார்ச் 13, 14,15 ஆகிய தேதிகளில் இவர் லக்னோவில் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொண்டார். அப்போது இவருக்கு கொரோனா இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கனிகா கபூர்.. ஒரே பெண்ணால் குடியரசுத் தலைவர் முதல் எம்பிக்கள் வரை.. கொரோனா அச்சம்.. என்ன நடந்தது? கனிகா கபூர்.. ஒரே பெண்ணால் குடியரசுத் தலைவர் முதல் எம்பிக்கள் வரை.. கொரோனா அச்சம்.. என்ன நடந்தது?

    கொரோனா யார்

    கொரோனா யார்

    கனிகா கபூர் மூலம் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த் ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவரால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோருக்கு இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று இரவோடு இரவாக கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது.

    எப்படி வந்தார்

    எப்படி வந்தார்

    கனிகா கபூர் மும்பை விமான நிலையத்தில் கொரோனா சோதனையில் இருந்து தப்பியது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி இவர் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு அப்போது கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆனால் இதை தவிர்க்க வேண்டும் என்று கனிகா கபூர் திட்டமிட்டுள்ளார். இதனால் நேரடியாக போய் பாத் ரூமில் ஒளிந்துகொண்டுள்ளார்.

    மக்கள் எல்லாம் போனார்கள்

    மக்கள் எல்லாம் போனார்கள்

    மக்கள் எல்லாம் போன பின் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். தான் பிரபலம் என்பதால் மக்களை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் இப்படி செய்துள்ளார். ஆனால் மக்கள் கூட்டம் அங்கு குறைந்த போதும் கூட, தொடர்ந்து கொரோனா சோதனைகள் நடந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த சோதனையை தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் காசு கொடுத்துவிட்டு வேறு வழியாக வெளியே சென்றுள்ளார்.

    வெளியே சென்றார்

    வெளியே சென்றார்

    அங்கிருந்து வெளியே சென்றவர் பின் மும்பையில் சுற்றிவிட்டு 3 நாட்கள் கழித்து ஏர் இந்தியா விமானம் மூலம் மார்ச் 11ம் தேதி லக்னோ சென்றுள்ளார். மும்பை டூ லக்னோ பயணம் உள்ளூர் பயணம் ஆகும். இந்த பயணம் எதிலும் அவருக்கு கொரோனா சோதனை செய்யப்படவில்லை. இதனால் கொரோனா இருந்தும் கூட பல இடங்களுக்கு பயணம் செய்தும், கனிகா கபூர் யாரிடமும் சிக்காமல் தப்பித்து இருக்கிறார்.

    கண்டுபிடிக்கப்பட்டது

    கண்டுபிடிக்கப்பட்டது

    மார்ச் 16ம் தேதிதான் இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கி இருக்கிறது. லக்னோவில் உள்ள KGMU மருத்துவமனையில் இவருக்கு சோதனை நடந்து தற்போது வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கனிகா கபூர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 269, 270, 188 ஆகிய நோயை பரப்புதல், மக்கள் உயிருக்கு ஊறுவிளைவித்தல் , அரசு விதிகளை மீறி மக்களை தொந்தரவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    English summary
    Coronavirus: How Singer Kanika Kapoor managed to escape from screening in Airports?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X