மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் நீட்டிப்புக்கு எதிர்ப்பு மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா வைரஸை தடுக்க லாக்டவுனை மேலும் 19 நாட்கள் நீடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நூற்றுக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் 3000த்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Recommended Video

    மும்பையில் பிற மாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

    லாக்டவுன் அமலாக்கப்பட்டதால் பிற மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர். போதுமான வருமானம் இல்லாமல் கடந்த 21 நாட்களாக அவர்கள் அவதிப்பட்டனர்.

     Coronavirus lockdown extension: Massive protest by migrant workers in Mumbai

    இந்த நிலையில் இன்று மேலும் 19 நாட்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் பிற மாநிலங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனிடையே மகாராஷ்டிராவின் மும்பையில் பாந்தரா பகுதியில் திடீரென நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை

    லாக்டவுன் காலத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதையும் மீறி நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்த மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கொரோனா.. ஒரே நல்ல செய்தி.. 2 நாட்களாக வேகம் காட்டும் தமிழகம்.. இதுதான் இப்போது மிக முக்கிய தேவை! கொரோனா.. ஒரே நல்ல செய்தி.. 2 நாட்களாக வேகம் காட்டும் தமிழகம்.. இதுதான் இப்போது மிக முக்கிய தேவை!

    ஊரடங்கு நீட்டிப்பால் ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் அனைவரும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் கூலி தொழிலாளிகள் ஆவர். தற்போது வேலையில்லாமல் இருக்கும் அவர்கள் லாக்டவுன் முடிந்த உடன் சொந்த ஊர் சென்றால் பிழைக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் தற்போது லாக்டவுன் மே 3 வரை நீடிப்பால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "பாந்த்ரா சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. ரேஷன் கார்டுகள் இல்லாத தொழிலாளர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல் நாளிலிருந்து நாங்கள் அரசிடம் கூறிக் கொண்டிருந்தோம். அனைவருக்கும் உணவு மற்றும் ரேஷனை வழங்கும் பொறுப்பை மாநில அரசு ஏற்றிருக்க வேண்டும். ஆனால் தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதில் மாநில அரசு தவறிவிட்டது. அதனால்தான் இன்று நாம் இத்தகைய சங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது, அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் வந்து, எங்களுக்கு உணவு வழங்குங்கள் அல்லது வீட்டிற்கு செல்கிறோம் என்ற போராடி உள்ளார்கள் என்றார்.

    English summary
    Hundreds of migrant workers hold preotest in Mumbai against the Lockdown extension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X