மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுனை பற்றி கவலையே இல்லை.. மகா. பாஜக எம்.எல்.ஏ. பிறந்த நாளில் குவிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்

Google Oneindia Tamil News

மும்பை: நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருப்பதை பற்றி கவலையேபடாமல் மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கிறது. இன்று 12-வது நாளாக லாக்டவுன் நடைமுறையில் இருந்து வருகிறது.

Coronavirus lockdown: In Maharashtra Hundreds gather to celebrate BJP MLA’s birthday

ஆனாலும் நாட்டின் பல பகுதிகளிலும் லாக்டவுனை பொதுமக்கள் மீறி சாலைகளில் வலம் வருகின்றனர். இதனால் பல நகரங்களில் போலீசார், தடையை மீறிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் வார்தா பாஜக எம்.எல்.ஏ. தாதாராவ் கேசேவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு கொரோனாவால் உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதாக அவர் அறிவித்திருந்தார்.

கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.. சுற்றி வளைத்து சீல் வைக்கும் மத்திய அரசு.. அதிரடி திட்டங்கள்!கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்.. சுற்றி வளைத்து சீல் வைக்கும் மத்திய அரசு.. அதிரடி திட்டங்கள்!

Recommended Video

    கொரோனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம் சென்ற மக்கள்

    ஆனால் எம்.எல்.ஏ. தாதாராவ் தமது பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்குவதாக தகவல் பரவியது. இதனால் நூற்றுக்கணக்கானோர் அவரது வீடு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் நிலைமையை விளக்கி கலைந்து போக செய்தாராம் தாதாராவ் எம்.எல்.ஏ.

    English summary
    In Maharashtra Hundreds gathered to celebrate BJP MLA’s birthday on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X