மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில்தான் நிலைமை மோசம்.. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,078 ஆக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்று நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,078 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதுவரை மொத்தம் 149 பேர் கொரோனா தொற்று நோயால் பலியாகி உள்ளனர்.

Coronavirus: Maharashtra tally jumps to 1,078

கொரோனாவுக்கு 4643 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மகாராஷ்டிராவில் மட்டும் 1018 பேர் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அம்மாநிலத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1078 ஆக அதிகரித்துள்ளது. பிர்ஹான் மும்பை மாநகராட்சி பகுதியில் 44 பேரும் புனே மாநகராட்சி பகுதியில் 9, நாக்பூரில் 4, அகமதுநகர், புல்தானா மற்றும் அகோலாதாவின் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1000ஐ தொட்ட மகாராஷ்டிரா.. நம்பிக்கை தரும் கேரளா.. இந்தியாவில் 4789 பேருக்கு கொரோனா.. 124 பேர் பலி! 1000ஐ தொட்ட மகாராஷ்டிரா.. நம்பிக்கை தரும் கேரளா.. இந்தியாவில் 4789 பேருக்கு கொரோனா.. 124 பேர் பலி!

இதேபோல் குஜராத்தில் கொரோனாவின் பாதிப்பு 165 ஆக இருந்தது தற்போது 179 ஆக அதிகரித்திருக்கிறது. குஜராத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர். இதனால் குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 16 ஆக அதிகரித்திருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.

English summary
60 new coronavirus cases were reported in Maharashtra, taking the toll number of such cases in the state to 1,078, a health official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X