மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் ஜூலை 15 வரை 144 தடை உத்தரவு அதிரடி அமல்

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் அதிரடியாக மும்பையில் ஜூலை 15-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 1,74,761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Coronavirus: Section 144 imposed in Mumbai

மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை7,855 ஆகவும் அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் மும்பை மாநகரத்தில் கொரோனா தாக்கம் மிக கொடூரமாக இருந்து வருகிறது.

மும்பையில் மட்டும் 77,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 4,556 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா பரவுவதைத் தடுக்க மகாராஷ்டிரா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

"பாசிட்டிவ்".. ஷாக் ஆன ஓ.ராஜா.. வீட்டிலிருந்து வெளியிலேயே செல்லாத நிலையில் தொற்று வந்தது எப்படி?

மேலும் மகாராஷ்டிராவில் லாக்டவுன் ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மும்பையில் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தடை செய்யும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு வரும் 15-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

https://tamil.oneindia.com/news/chennai/theni-o-paneerselvams-brother-o-raja-tested-corona-positive-389954.html

English summary
Mumbai police has imposed section 144 of the CrPC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X