மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 ரூல் தான்.. கொரோனாவை ஓட ஓட விரட்டலாம்.. ரொம்ப சிம்பிள்.. ஆதித்யா தாக்கரே சூப்பர் டிப்ஸ்!

ஆதித்யா தாக்கரே ட்வீட் பதிவிட்டு அறிவுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே.. கொரோனா வைரஸிலிருந்து தப்ப ஒரு சிம்பிளான டிப்ஸ் கொடுத்துள்ளார்.

Recommended Video

    தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு... திணறும் மகாராஷ்டிரா

    கொரோனாவைரஸ் பீதி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதிலிருந்து மீள கடுமையான உளவியல் போராட்டத்திலும் ஈடுபட வேண்டியுள்ளது. ஆனால் அதெல்லாம் தேவையே இல்லை.. பயத்தை சுத்தமாக துடைத்தெடுத்து விட்டு ரிலாக்ஸாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே போதும்.

     coronavirus: wear a mask IF you have to step out, says Aaditya Thackeray

    இதைத்தான் அரசுகளும் சொல்லி வருகின்றன. வெளியே வராதீங்க. கைகளை அவ்வப்போது சுத்தமாக வைச்சுக்கங்கோ. முகத்தில் மாஸ்க் போடுங்க. வெளியில் வருவதை முற்றிலும் குறைத்துக் கொண்டால் ரொம்ப நல்லது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். பிரபலங்களும் கூட இதையேதான் சொல்லிவருகின்றனர்.

    இந்த விஷயத்தில் மக்களுக்கு ஓரளவு நன்றாகவே விழிப்புணர்வு உள்ளது. அதை மறுக்க முடியாது. அதேசமயம், இன்னும் பலர் உரிய விழிப்புணர்வு இல்லாமல், பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காமல் ரொம்ப கேஷுவலாக ஊர் சுற்றிக் கொண்டுதான் உள்ளனர். அவர்களிடம் போலீஸார் கெஞ்சிப் பார்த்து விட்டனர், பின்னாடி அடித்தும் பார்த்து விட்டனர். ஆனாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.

    இந்த நிலையில்தான் ஆதித்யா தாக்கரே ஒரு டிவீட் போட்டுள்ளார். ரொம்ப சிம்பிளான டிவீட்தான். முகத்தில் மாஸ்க்குடன் அதில் காட்சி தருகிறார் ஆதித்யா. கூடவே இரண்டு ரூல் கொடுத்துள்ளார்.

    ரூல் நம்பர் 2: வீட்டை விட்டு வெளியே வரும்போது மறக்காமல் மாஸ்க் போட்டுக் கொண்டு வாருங்கள்.

    ரூல் நம்பர் 1: வீட்டை விட்டு தயவு செய்து வரவே வராதீர்கள்.

    நமது நல்லதுக்காக நமது பழக்கவழக்கங்களை சற்று மாற்றுவோம். மாற்றத்தை பரப்புங்கள். வைரஸின் சங்கிலித் தொடரை உடையுங்கள் #WarAgainstVirus என்று ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.

    English summary
    coronavirus: wear a mask IF you have to step out, says Aaditya Thackeray
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X