மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாமதமாகும் "பீரியட்ஸ்".. வயிற்று வலி வேறு.. கலக்கத்தில் பெண்கள்.. இதுக்கும் லாக்டவுன்தான் காரணம்!

மாதவிடாய் தாமதமாக வருவதுடன், பெண்கள் வயிற்று வலியாலும் அவதிப்படுகின்றனர்

Google Oneindia Tamil News

மும்பை: இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ இந்த கொரோனாவைரஸ்... இப்போதெல்லாம் பெண்களுக்கு சரியான முறையில் பீரியட்ஸ் வருவதில்லை.. அத்துடன் கடுமையான வயிற்று வலியாலும் அவதிப்படுகிறார்கள்.. இதுக்கும் காரணம் இந்த கொரோனாவைரஸால் வந்த லாக்டவுன்தான்!!

பெண்களுக்கு மாதந்தோறும் வரும் சோதனையும் வேதனையும் இந்த பீரியட்ஸ்தான். அதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. இதை உணர்ந்த ஆண்கள் மிகக் குறைவுதான். பலருக்கு உரிய நாட்களில் இது வந்தாலும் மேலும் பலருக்கு இர்ரெகுலர்தான். அவர்கள் படும் அவஸ்தைதான் மிகக் கொடுமையானது.

ஆனால் தற்போது ரெகுலராக இருக்கும் பலருக்குக் கூட பீரியட்ஸ் வருவதில் தாமதம் ஏற்படுகிறதாம். இதற்கு என்ன காரணம் என்றால் இந்த லாக்டவுன்தானாம். அதாவது இந்த லாக்டவுனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தால்தான் பீரியட்ஸ் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்லியுள்ளன.

பயம்

பயம்

தற்போது எல்லோருடைய மனதிலுமே ஒரு விதமான குழப்பம், அச்சம், பயம், வெறுப்பு, விரக்தி நிலவுகிறது. மன ரீதியாகவே எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இருக்கும் பிரச்சினைகளிலேயே இதிலிருந்து தப்புவதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதன் காரணமாக பெண்களுக்குத்தான் பெரிய பிரச்சினை. அதாவது பீரியட்ஸ் தடைபடுகிறதாம்.

அவுட்லெட்

அவுட்லெட்

இந்த மன அழுத்தமானது பெண்களின் மாத விடாய் பருவத்தை பாதிக்கிறதாம். காரணம் வீட்டுக்குளேளேயே இருக்கிறார்கள்... மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இடைவிடாமல் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு அவுட்லெட்டும் இல்லை. சரியாக தூங்க முடிவதில்லை. இப்படிப்பட்ட காரணங்களால் பீரியட்ஸ் வருவதில் தடைபடுகிறதாம்.

ஸ்டெரஸ்

ஸ்டெரஸ்

இது உலகம் முழுவதும் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாம். பீரியட்ஸ் தாமதமாவது ஒரு பிரச்சினை என்றால் வரும் பீரியட்ஸும் அதிக வலி மிக்கதாக பலருக்கு இருக்கிறதாக சொல்லப்படுகிறது. இதற்கும் இந்த லாக் டவுன் ஸ்டிரஸ்தான் காரணம். வழக்கமான நாட்களில் நாம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. மனதை பல விஷயங்களில் மாற்றி மாற்றி கொண்டு செல்ல முடிகிறது. ஆனால் தற்போது எல்லோருடைய மனசும் ஒரே விஷயத்தில்தான் விழுந்து கிடக்கிறது.. அதுதான் இந்த கொரோனா. இதுவே இந்த பீரியட்ஸ் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாம்.

சாப்பாடு

சாப்பாடு

பலருக்கு இந்த லேட் பீரியட்ஸ் அல்லது மாத விடாய் சுழற்சியில் ஏற்படும் மாறுதல் காரணமாக தலைவலி உள்ளிட்டவை அதிகரிக்கவும் செய்கிறது. இதுதொடர்பாக கொல்கத்தாவில் உள்ள டாக்டர் மதுரிமா குமார் என்பவர் கூறுகையில், "இதை சாதாரணாக போக்க முடியும். அதாவது வழக்கமான சாப்பாடு இல்லாமல் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இயல்பாக இருங்கள். வழக்கம் போல செயல்படுங்கள். கொரோனாவையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.. நிச்சயம் இதை சரி செய்ய முடியும்" என்று கூறியுள்ளார் மதுரிமா.

ஹார்மோன் சுரப்பு

ஹார்மோன் சுரப்பு

ஸ்டிரஸ் அதிகமாவதால் உடலில் இன்சுலின் அளவும் சமமற்ற நிலையை அடைகிறதாம். இப்படி நேரும்போது உடலில் லெப்டின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே பீரியட்ஸ் தாமதப் பிரச்சினை வருகிறதாம். அதாவது வழக்கத்தை விட 7 அல்லது 8 நாட்கள் தாமதமாகுமாம். இதற்கு "ஓலிகோமெர்ரியா" என்று பெயர் வைத்துள்ளனர் டாக்டர்கள். லாக்டவுன் சீக்கிரமே முடிவுக்கு வந்தால் இந்த பிரச்சினையும் முடிவுக்கு வருமாம். இல்லாவிட்டால் இதுவும் நீடிக்குமாம்.

மனநிலை

மனநிலை

இதற்கு என்னதான் தீர்வு என்று கேட்டால்.. வழக்கம் போல இயல்பாக இருங்கள். உடலில் ஸ்டிரஸ் ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக அமைதியா இருங்க. எது நடந்தாலும் நடக்கட்டும் என்று எளிதாக எடுத்துக் கொள்ளும் மன நிலைக்கு பக்குவப்படுங்க. நல்லா சாப்பிடுங்க... ஹேப்பியா இருங்க... அதுதான் நம்மை நாமே சரியாக வைத்துக் கொள்ள உதவும். உடற்பயிற்சி கை கொடுக்கும்.... சத்தான ஆகாரம் அவசியம். வேறு பயப்படத் தேவையில்லை என்பது டாக்டர்களின் கருத்து.

English summary
coronavirus: why some women are reporting irregular periods
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X