மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி... 50 நாளில் குறையும் அபாயம்... புதிய ஆய்வில் தகவல்!!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் இருக்கும் ஜெஜெ மருத்துவமனை குழுமம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இரண்டு மாதங்களுக்கு கூட நீடிப்பதில்லை என்று புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர் நிஷாந்த் குமார் தெரிவித்து இருக்கும் தகவலில், ''28 கொரோனா தொற்று பாசிடிவ் இருப்பவர்கள் உள்பட 801 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 28 பேருக்கு ஏப்ரல் இறுதியில் மே மாத துவக்கத்தில் இந்த தொற்று ஏற்பட்டு இருந்தது. இவர்களிடம் கடந்த ஜூன் மாதத்தில் ஜீரோ ஆய்வு மேற்கொண்டபோது இவர்களுக்கு யாருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி இல்லை.

Covid 19 antibody is not lasting more than 50 days shows new survey

மேலும் 34 கொரோனா தொற்று நோயாளிகளிடம் ஜீரோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு பிரிவுகளாக இவர்கள் பிரிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 90% பேருக்கு மூன்று வாரங்களில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. வெறும் 38.5% பேருக்குத்தான் ஐந்து வாரங்கள் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் நாட்டில் ஒருவருக்கு கொரோனா குணமடைந்த பின்னர் மீண்டும் கொரோனா வந்து இருப்பதை அடுத்து இந்த செய்தி உலக அளவில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஏற்பட்டு இருந்தால், அதில் இருந்து ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி ஒருவரை பாதுகாக்கும் என்று கூறப்பட்டு வந்தது. மீண்டும் கொரோனா ஏற்படாது என்று கூறப்பட்டு வந்தது. அல்லது முதலில் தொற்று ஏற்பட்டு இருக்கும்போது ஊசி போட்டுக் கொண்டு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக நாடுகளில் இந்தியா தொடர் முதலிடம்- 24மணிநேரத்தில் 77,266 பேருக்கு தொற்றுஒருநாள் கொரோனா பாதிப்பு: உலக நாடுகளில் இந்தியா தொடர் முதலிடம்- 24மணிநேரத்தில் 77,266 பேருக்கு தொற்று

இந்த நிலையில் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு விரைவில் குறைந்துவிடுவது அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து வேறு மாதிரியான கருத்துக்களை தொற்று நோய் சிறப்பு மருத்துவர் கிரிதார் ஆர் பாபு முன் வைத்துள்ளார். அவர் தெரிவித்து இருக்கும் தகவலில், ''அறிகுறி இல்லாத கொரோனா தொற்று நோயா அல்லது அறிகுறி இருக்கும் கொரோனா தொற்று நோயா என்ற இரு வேறு கேள்விகள் எழுகின்றன. அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தால். நோய் எதிர்ப்பு சக்தி போதியதாக இருக்காது. ஆனால், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஏற்பட்டு, நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இருக்கும்.

Recommended Video

    Covishield தடுப்பூசி குறித்து Serum CEO சூப்பர் தகவல்

    டி செல்கள் அல்லது கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் ஆன்டிபாடிகளை சமன்படுத்துதல்தான் கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும். Immunoglobulin G என்பது பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Covid 19 antibody is not lasting more than 50 days shows new survey
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X