மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 18ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

Google Oneindia Tamil News

மும்பை: நேற்று கோவின் விண்ணப்பத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 18 வரை கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கோவின் விண்ணப்பத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் சரியான உடன் தடுப்பூசி போடப்படும் தேதி ஜனவரி 18 (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்றார்கள்.

 Covid vaccination suspended till January 18 in Maharashtra over technical issues

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும்போது முற்றிலும் டிஜிட்டல் பதிவு கட்டாயமாகும். ஆனால் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக மகாராஷ்ராவில் பதிவு செய்ய இயலவில்லை. எனவே தான் தடுப்பூசி போடும் பணி அங்கு மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்று ஆஃப்லைன் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது. எனவே மகாராஷ்டிராவில் திங்கள்கிழமைக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

இதற்கிடையில், மும்பையில் நேற்று மொத்தம் 1,926 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது. இது 4,100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் குறைந்த அளவே தடுப்பூசி போட முடிந்தது. மும்பையில் உள்ள பத்து வித்தியாச மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

தமிழகத்தில் முதல் நாளில் 2945 பேருக்கு தடுப்பூசி.. 2வது நாளாக இன்றும் பணிகள் தொடர்கிறது தமிழகத்தில் முதல் நாளில் 2945 பேருக்கு தடுப்பூசி.. 2வது நாளாக இன்றும் பணிகள் தொடர்கிறது

  • கேஇஎம் மருத்துவமனை: 243
  • சியோன் மருத்துவமனை: 188
  • நாயர் மருத்துவமனை: 190
  • கூப்பர் மருத்துவமனை: 262
  • பாபா மருத்துவமனை: 149
  • வி.என் தேசாய் மருத்துவமனை: 80
  • ராஜவாடி மருத்துவமனை: 289
  • டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனை காண்டிவலி: 266
  • பி.கே.சி ஜம்போ கோவிட் -19 மையம்: 220
English summary
after technical issues were reported in the CoWIN application on Saturday, Maharashtra has suspended coronavirus vaccinations across the state till January 18. As per officials, if the technical issues are sorted in time then the next day and time will be announced on January 18 (Monday) itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X