மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வேக்சினுக்கு குறி.. லைனில் நிற்கும் கோடீஸ்வரர்கள், கார்ப்பரேட்கள்.. இந்தியா எடுத்த அஸ்திரம்!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துக்கு உலகம் முழுக்க கடுமையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துக்கு உலகம் முழுக்க கடுமையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை மொத்தமாக வாங்க பல்வேறு வல்லரசு நாடுகள் காத்து இருக்கிறது. இந்த மருந்து அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இந்தியா சிறப்பான முடிவு ஒன்றை எடுக்க போகிறது என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Operation Warp Speed: கொரோனா மருந்துகளை ஆர்டர் செய்த அமெரிக்கா

    கொரோனா தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது.

    இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது.

    என்ன விலை

    என்ன விலை

    இந்த நிலையில் இந்த கொரோனா வேக்சின் என்ன விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகம் முழுக்க பல நாடுகள் இந்த மருந்தைதான் எதிர்பார்த்து உள்ளது. அமெரிக்கா இப்போதே ஜெர்மனியில் இருக்கும் பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) மற்றும் வால்நேவா (Valneva) ஆகிய நிறுவனங்களிடம் மருந்துகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. பயோஎன்டெக் (BioNTech) பிபிசெர் (Pfizer) நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக 10 கோடி கொரோனா வேக்சின்களை வாங்க அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது.

    பெரிய மார்க்கெட்

    பெரிய மார்க்கெட்

    இதற்காக 1450 கோடி ரூபாயை செலவு செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது. அமெரிக்கா இப்படி 1450 கோடி ரூபாய் கொடுப்பதால் கண்டிப்பாக உலகம் முழுக்க இந்த மருந்துகளுக்கு அதிக விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவை வைத்து கார்ப்ரேட் நிறுவனங்கள் பெரிய அளவில் பலன் அடைய போகிறது என்றும் கூறுகிறார்கள்.

    ரஷ்யாவில் எப்படி

    ரஷ்யாவில் எப்படி

    ரஷ்யாவில் இப்போதே மருந்துகளை வாங்க பணக்காரர்கள் லைனில் நிற்கிறார்கள். அதிலும் அந்நாட்டு அரசியலை கட்டுப்படுத்தி வரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குதான் இந்த மருந்தை முதல் ஆளாக கொடுக்க இருக்கிறார்கள். பல கோடி ரூபாய்களை கொடுத்து அவர்கள் இந்த மருந்தை வாங்க உள்ளனர். இவர்களுக்கு மருந்தை கொடுத்தது போகவே மற்றவர்களுக்கு மருந்தை கொடுக்க இருக்கிறார்கள்.

    ஆனால் தனித்து நிற்கும்

    ஆனால் தனித்து நிற்கும்

    ஆனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மட்டுமே இதில் தனித்து நிற்க முடிவு செய்துள்ளது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து கண்டுபிடித்து உள்ள தடுப்பூசியை மக்களுக்கு குறைந்த விலையில் விற்க இருக்கிறார்கள். மற்ற நிறுவனங்கள் போல எந்தவிதமான லாபத்தையும் கணக்கில் கொள்ளாமல் மருந்தை விற்பனை செய்ய இருக்கிறார்கள்.

    அதுவரை வேண்டாம்

    அதுவரை வேண்டாம்

    இந்த கொரோனா பாதிப்பு முடியும் வரை லாபம் எதுவும் வேண்டாம். லாபத்தை எதிர்பார்க்காமலே மருந்தை விற்பனை செய்கிறோம் என்று இவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இதனால் இந்த ஆக்ஸ்போர்ட் மருந்து மட்டும் மக்களுக்கு எளிதாக குறைந்த விலையில் கிடைக்கும் என்கிறார்கள். அதாவது மற்ற மருந்துகள் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் கூட ஆக்ஸ்போர்ட் மருந்து கண்டிப்பாக எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    ஆஸ்டெராசெனெகா இந்தியா

    ஆஸ்டெராசெனெகா இந்தியா

    ஆஸ்டெராசெனெகா நிறுவனம் உடன் இணைந்து இந்தியாவில் இந்த தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கிறது. உலகம் முழுக்க இந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாதான் கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய போகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தை வெறும் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்போது பணம் முக்கியம் இல்லை.இந்த மருந்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்வோம், என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    என்ன முடிவு

    என்ன முடிவு

    இந்த மருந்து மொத்தமாக இந்தியர்களுக்கு கிடைக்கும் வகையில் அரசு முக்கிய முடிவு ஒன்றை கையில் எடுத்துள்ளது என்கிறார்கள். அதன்படி இந்த மருந்தை சீரம் நிறுவனம் யாருக்கும் விற்க முடியாது. அரசுக்கு மட்டுமே இந்த மருந்தை சீரம் நிறுவனம் விற்க முடியும். சீரம் நிறுவனத்திடம் இருந்து அரசு 1000 ரூபாய்க்கு மருந்தை வாங்கும். அதன்பின் அரசுதான் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும்.

    மக்கள் முக்கியம்

    மக்கள் முக்கியம்

    இதனால் இடையில் கோடீஸ்வரர்கள் யாரும் இந்த மருந்தை வாங்கி குவிக்க முடியாது. பொது வழங்கல் அடிப்படையில் இந்த மருந்தை அரசே மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் என்கிறார்கள். கொரோனா பாதிப்பு குறைந்த பின் சீரம் நிறுவனமே இந்த விற்பனையை எடுத்துக்கொள்ளும். அதுவரை அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Covid Vaccine: Govt may take over the distributions of Serum institute vaccines in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X