மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தந்தையின் சடலத்துடன் சுடுகாட்டுக்கு ஓடிய மகன்.. அங்கே காத்திருந்த பெரும் அதிர்ச்சி.. கொடுமை!!

கொரோனாவால் இறந்த தந்தையை அடக்கம் செய்ய தவித்துள்ளார் மகன்

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனாவால் இறந்த தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய யாருமே வராமல் பெற்ற மகன் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கணேஷ் நகர் பகுதியில் வசித்து வந்த ஒரு டாக்டர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.. அதனால் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையும் தரப்பட்டது.. ஆனால் சிகிச்சை பலனின்றி டாக்டர் உயிரிழந்துவிட்டார்.

 covid19: with no hearse helper sons in ppe suits cremate his father who died of coronavirus

இதையடுத்து, இவரது மகனுக்குதான் சிக்கல் மேல் சிக்கல் வந்தது.. தந்தை இறந்துவிடவும், அவரது உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி ஏற்பாடு செய்ய முயன்றார்.. எங்கெங்கோ முயற்சித்தும் வண்டியே கிடைக்கவில்லை.. வைரஸ் பாதித்து இறந்தவர் சடலத்துடன் நீண்ட நேரம் காத்திருப்பதும் பெரிய சிக்கலாக இருந்தது.

கடைசியில் ஒரு வண்டி கிடைத்தது.. ஆனால் அப்போதும் ஒரு சோதனை வந்தது.. சடலத்தை தூக்கி வண்டியில் வைக்க யாருமே முன்வரவில்லை.. எத்தனையோ பேரிடம் கெஞ்சியும், உதவி செய்ய தயங்கினார்கள், ஒருசிலர் வெளிப்படையாகவே மறுத்துவிட்டனர்.

இதற்கு பிறகு அந்த மகனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல், ஒரு பாதுகாப்பு உடையை எடுத்து அணிந்து கொண்டார்.. நண்பர் ஒருவரை உதவிக்கு அழைத்து, தந்தையின் சடலத்தை அந்த வண்டியில் ஏற்றி சுடுகாட்டுக்கு சென்றார்.

சென்னை அருகே நோக்கியா ஆலையில் அடுத்தடுத்து 42 பேருக்கு கொரோனா.. மூடப்பட்ட ஆலை.. பரபரப்பு தகவல் சென்னை அருகே நோக்கியா ஆலையில் அடுத்தடுத்து 42 பேருக்கு கொரோனா.. மூடப்பட்ட ஆலை.. பரபரப்பு தகவல்

ஒருவழியாக சுடுகாட்டுக்கு போனால், அங்கே இனனொரு கொடுமை காத்திருந்தது.. அந்த சடலத்தை எரிக்க யாருமே முன்வரவில்லை.. சுடுகாட்டிலும் யாரும் இல்லை.. அதனால் மகனே குழியை வெட்டி, அடக்கம் செய்வதற்கான எல்லா வேலைகளையும் செய்தார்.. இறுதியில் தந்தையின் உடலை தகனம் செய்து முடித்தார்... இறந்த தந்தையின் சடலத்தை ஏற்றவும், எரிக்கவும், யாருமே முன்வராத இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.. மனிதாபிமானம் எல்லாம் மருந்துக்கூட இல்லாமல் போய் கொண்டிருக்கிறது!!

சென்னை அருகே நோக்கியா ஆலையில் அடுத்தடுத்து 42 பேருக்கு கொரோனா.. மூடப்பட்ட ஆலை.. பரபரப்பு தகவல்

English summary
coronavirus: with no hearse helper sons in ppe suits cremate his father who died of coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X