மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை நிழல் உலக தாதா தாவூத்தின் இப்ராஹிம் சிறுவயதில் இருந்த வீடு , பெட்ரோல் பங்க், அடுக்குமாடி குடியிருப்பு,ஹோட்டல்
உள்பட 14 சொத்துக்களை பறிமுதல் செய்த அரசு, அவற்றை ஏலம் விட முடிவு செய்துள்ளது. இதன்படி தாவூத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளது.

மும்பை நிழல் உலக தாதா என கூறப்படும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிம் கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்புக்கு மூலகாரணம் ஆவார். இதுமட்டுமின்றி பல சட்டவிரோத செயல்கள் மூலம் பணத்தை குவித்த தாவூத், மும்பையின் தாதாவாக 1990களில் இருந்தார், 2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் தாவூத்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தாவூத்தை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவரது தலைக்கு கடந்த 2015ம் ஆண்டு 6.7 பில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இவர் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

மதிப்பிடும் பணி

மதிப்பிடும் பணி

இந்நிலையில் பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டதாவூத்தின் 14 சொத்துக்களை ஏலம்விட கடத்தல் மற்றும் அந்நியச் செலாவணி கையகப்படுத்தும் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை ஆகியவை முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக தாவூத்தின் சொத்துக்களின் இன்றை மதிப்பினை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சொத்துக்களை மதிப்பீடு செய்த பின் ஏலம் விடப்பட உள்ளது.

இநதிய அரசின் கட்டுப்பாட்டில்

இநதிய அரசின் கட்டுப்பாட்டில்

தாவூத் தனது பெரும்பாலான சொத்துக்களை தனது தாயார் அமீனா பீ மற்றும சகோதரி ஹசீனா பர்கர் பெயரில் வாங்கி உள்ளார். அவருடைய பெரும்பாலான கட்டடிடங்கள் காலியாக உள்ளதோடு இந்திய அரசின் கட்டுபபாட்டில் உள்ளன.

ஏலத்து வருகிறது

ஏலத்து வருகிறது

தாவூத்தின் சகோதரி ஹசீனா பார்க்கர் பெயரில் தெற்கு மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு 1.69 கோடி ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது அது 1.80 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதேபோல் மற்ற 5 சொத்துக்கள் வெவ்வேறு வழக்கின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றையும் ஏலம் விடப்போகிறாரகள் அதிகாரிகள். இதுவரை 20 கஷ்டமர்கள் அந்த கட்டடிடங்களை வாங்குவதற்காக பார்த்து சென்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க்

2015ம் ஆண்டு தாவூத்துக்கு சொந்தமான ஹோட்ட ரௌனக் அப்ரோஸ் ஏலம் விடப்பட்டது. ஆனால் ஏலத்துக்கான தொகையான 4.28 கோடியை ஏலம் எடுத்தவர் கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் ஏலம் விடப்பட உள்ளது. இதேபோல் தாவூத் பிறந்து வளர்ந்த வீடு (ரத்னகிரியில் உள்ளது), பெட்ரோல் பங்க் உள்பட மொத்தம் 14 சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
14 of Dawood’s properties to be auctioned, properties include those where the gangster spent his childhood at Khed in Ratnagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X