மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் பதவியில் 50:50.. சிவசேனாவுக்கு அமித்ஷா உறுதி அளித்தாரா?.. பட்னவீஸ் விளக்கம்

Google Oneindia Tamil News

மும்பை: முதல்வர் பதவியில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு பாஜக எவ்வித உறுதியையும் அளிக்கவில்லை என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகளை கொண்டது. பெரும்பான்மைக்கு மொத்தம் 145 இடங்கள் தேவை.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி வெற்றுள்ளது. எனவே எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாதுகாப்பு துறையில் முக்கிய ஒப்பந்தம்.. சவுதி சென்ற பிரதமர் மோடி திட்டம்.. சல்மானை சந்திக்கிறார்!பாதுகாப்பு துறையில் முக்கிய ஒப்பந்தம்.. சவுதி சென்ற பிரதமர் மோடி திட்டம்.. சல்மானை சந்திக்கிறார்!

சிவசேனா எம்எல்ஏக்கள்

சிவசேனா எம்எல்ஏக்கள்

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த இரு நாட்களில் முதல்வர் பதவியை சரிசமமாக பிரிக்க வேண்டும். இரண்டரை ஆண்டுகள் பாஜகவும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் ஆட்சி செய்ய வேண்டும் என சனிக்கிழமை நடந்த சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிவசேனா மறுப்பு

சிவசேனா மறுப்பு

ஆனால் இதை ஏற்க பாஜக மறுக்கிறது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக இறங்கி வந்துள்ளது. ஆனால் இதை ஏற்க சிவசேனா மறுத்து முதல்வர் பதவிதான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது.

சிவசேனா

சிவசேனா

தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கும் போது மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி 50:50 வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளதாக சிவசேனா கூறி வருகிறது. அதோடு அதை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

திறமை

திறமை

இதுகுறித்து முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறுகையில் பாஜக தலைமையிலான அரசு அமையும் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியை ஸ்திரத்தன்மையுடனும் திறமையுடனும் பாஜக வழி நடத்தியது.

கோரிக்கை

கோரிக்கை

முதல்வர் பதவி குறித்து சிவசேனா எந்த வித கோரிக்கையையும் வைக்கவில்லை. முதல்வர் பதவி 50:50 வழங்குவது குறித்து எங்கள் கட்சி தலைவர் அமித்ஷாவும் சிவசேனாவுக்கு எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என என்னிடம் கூறியுள்ளார். எனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு நானே மகாராஷ்டிரத்தின் முதல்வராக செயல்படுவேன் என பட்னவீஸ் தெரிவித்துள்ளார். இதனால் துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டு பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு அளிக்குமா இல்லை கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Devendra Fadnavis refuses that Amitshah didnt promise Shiv sena for 50:50 formula in Maharastra CM post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X