மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படி ஒரு நிலை வரக்கூடாதுப்பா.. 3 வாரங்களில் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை இழந்த பட்னாவிஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!| Devendra Fadnavis resigns as the Chief Minister

    மும்பை: பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் நிலைமை எந்த அரசியல்வாதிக்கும் வரக்கூடாது. 3 வாரத்தில், 3வது முறையாக தனது முதல்வர் பதவியை இழந்துள்ளார் அவர்.

    மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியானது. பாஜக 105 இடங்களில் வென்றது. ஆனால் கூட்டணி கட்சியான சிவசேனா, அதிகாரப் பங்கீடு தொடர்பாக முரண்டு பிடித்ததால், ஆட்சியமைக்க எம்எல்ஏக்கள் பலம் இல்லை என்பதை உணர்ந்து, நவம்பர் 8ம் தேதி, தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    Devendra Fadnavis resigns as CM twice in 3 weeks

    அப்போதைய சூழ்நிலையில், எந்த கட்சியுமே, ஆட்சியமைக்க முன்வரவில்லை. எனவே, காபந்து முதல்வராக பதவியில் தொடர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவரை கேட்டுக் கொண்டார். பட்னாவிசும், காபந்து முதல்வராக தொடர்ந்தார்.

    Devendra Fadnavis resigns as CM twice in 3 weeks

    இதையடுத்து ஆட்சியமைக்க 19 நாட்களாகியும் யாரும் வரவில்லை என கூறி, நவம்பர் 12ம் தேதி மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. எனவே, 2வது முறையாக மீண்டும், முதல்வர் பதவியை துறந்தார் தேவேந்திர பட்னாவிஸ்.

    இந்த நிலையில்தான், குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, கடந்த 23ம் தேதி மீண்டும், முதல்வராக பொறுப்பேற்றார் பட்னாவிஸ். ஆனால், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை என கூறி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்.. உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.. செம ராஜதந்திரம்!மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்.. உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.. செம ராஜதந்திரம்!

    ஆக மொத்தம், 3 வாரங்களில், 3வது முறையாக முதல்வர் பதவியை இழந்துள்ளார், தேவேந்திர பட்னாவிஸ்.

    English summary
    Fadnavis resigns as CM twice in 3 weeks , first time after the results he resigned and asked by Guv to continue as care taker CM, then took oath as CM on Saturday, then resigned now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X