மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா மட்டுமில்லை, நாட்டிலேயே இப்படி நடந்தது இல்லை.. தேவேந்திர பட்னாவிஸ் கோபம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra Floor Test Updates : சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு !

    மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை விதிமுறைகளின்படி கூட்டப்படவில்லை. கடந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு புதிய கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் ஆளுநர் முறைப்படி அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே சட்டசபை கூடியது என்பதே அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

    முதல்வர் உத்தவ் தாக்கரே, அமைச்சர்கள் உட்பட யார் யாரெல்லாம் சட்டசபையில் பதவிப்பிரமாணம் செய்தார்களோ, அவர்கள் பதவி பிரமாணம் செய்தது செல்லாது. இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென சபாநாயகரை மாற்றி திலீப் பாட்டில் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Devendra Fadnavis says, Appointment of Pro-tem Speaker was also unconstitutional

    மகாராஷ்டிரா சட்டசபை வரலாற்றில் மட்டும் கிடையாது, இந்தியாவில் எந்த ஒரு சட்ட சபையிலும் அல்லது நாடாளுமன்றத்திலும் இதுபோல இடைக்கால சபாநாயகர் நீக்கப்பட்டது கிடையாது. சட்டசபையில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடப்பதுதான் வழக்கம், ஆனால் தங்கள் எம்எல்ஏக்கள் மீது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை.

    சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தி இருந்தால் தங்கள் தரப்பு தோற்றிருக்கும், என்று அந்தக் கட்சிகள் அச்சப்படுகின்றனர். எனவே சபாநாயகர் அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். எனவேதான் நாங்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

    English summary
    BJP leader Devendra Fadnavis on Opposition MLAs walkout of state Assembly ahead of floor test: This session is unconstitutional & illegal. Appointment of Pro-tem Speaker was also unconstitutional.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X