மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தே மாதரம் பாடவில்லை.. சட்டசபை முறைப்படி கூடவில்லை.. பட்னாவிஸ் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Maharashtra Floor Test Updates : சிவசேனா கூட்டணி அதிரடி.. 169 எம்எல்ஏக்கள் ஆதரவு !

    மும்பை: மகாராஷ்டிர சட்டசபை கூட்டம் முறைப்படி துவக்கப்படவில்லை என்று பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கபடுவதால் அவையில் அமளி நிலவுகிறது.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சி மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) கோரியுள்ளது.

    Devendra Fadnavis says, Maharashtra assembly session is not per rules

    மதியம் 2 மணியளவில் சட்டசபை கூடியதும், இந்த அவை விதிமுறைகளின்படி கூடவில்லை என்று முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு குரல் எழுப்பினார்.

    இதை பாஜக உறுப்பினர்கள் வழிமொழிந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு தேவேந்திர பட்னாவிஸ் அளித்த விளக்கத்தில், "இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் ஆளுநரால், நியமிக்கப்பட்டிருந்தார். புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால சபாநாயகருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் திடீரென சபாநாயகரை மாற்றி உள்ளீர்கள். இந்திய வரலாற்றிலேயே இது போன்ற ஒரு சம்பவம் இப்போதுதான் நிகழ்கிறது.

    வந்தேமாதரம் இசைக்கப்படாமல் சட்டசபை கூடியுள்ளது. இதுவும் விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட இடைக்கால சபாநாயகர் திலீப் பாட்டில், இந்த சட்டசபை கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். அமைச்சரவை என்னை சபாநாயகராக பரிந்தது. இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே விதிமுறைகளின்படிதான் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது என்று விளக்கம் அளித்தார். இதை ஏற்காத பாஜகவினர், ஆளும் கட்சிக்கு எதிராக அமளியில் ஈடுபட்டதால், அவையில் பரபரப்பு நிலவியது.

    English summary
    BJP's Devendra Fadnavis in state assembly: This assembly session is not per rules.This session started without Vande Mataram, it is a violation of rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X