மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷ்.. ரொம்ப நாள் கழித்து.. தாராவியிலிருந்து நல்ல செய்தி.. நாடு முழுதும் பரவணும்.. என்னன்னு பாருங்க

தாராவியில் இன்று ஒருவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது

Google Oneindia Tamil News

மும்பை: இவ்வளவு நாட்கள் இல்லாமல், இன்னைக்குதான் முதல் முறையாக தாராவியில் ஒருத்தருக்குகூட கொரோனா வைரஸ் பரவவில்லை.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவில் உள்ளது... இது மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள இடம்.. பெரும்பாலும் தொழிலாளர்கள்தான் இங்கு அதிகம்... அதாவது, 2½ சதுர கிமீ பரப்பளவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு நெருக்கடி மிகுந்த இடம்.

Dharavi Reports Zero Postive Cases since April 1

மேலும் சுகாதார குறைபாடும் இருக்கக்கூடிய இடம்.. இந்த சமயத்தில், இந்தியாவுக்குள் வந்த கொரோனா கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி தாராவிக்குள் நுழைந்தது.. அப்போதிருந்தே தினம் தினம் தொற்று காரணமாக பீதியை கிளப்பி கொண்டு வந்தது தாராவி.. மக்கள் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசுகளே தாராவியை நினைத்து அதிக அளவு பயந்துபோய் விட்டனர்..

இங்கு தொற்று வந்துவிட்டால், அந்த சுற்றுவட்டார பகுதியே ஆபத்துதான் என்பதால், மத்திய, மாநில அரசுகள் மிக விரைந்து செயல்பட்டனர்.. ஏராளமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.. அதற்கேற்றார் போல தாராவி மக்களும் ஒத்துழைப்பு தந்தனர்.

ஆந்திரா உட்பட.. 4 மாநிலங்களில் அடுத்த வாரம் டிரைலர்.. கொரோனா தடுப்பூசிக்கு ரெடியாகும் இந்தியாஆந்திரா உட்பட.. 4 மாநிலங்களில் அடுத்த வாரம் டிரைலர்.. கொரோனா தடுப்பூசிக்கு ரெடியாகும் இந்தியா

நேற்றைய நிலவரப்படி தாராவியில் 3 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது... வைரஸ் பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 460 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.. 16 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆனால், இன்றைக்கு அங்கு யாருக்குமே தொற்று இல்லையாம்.. கொரோனா பரவிய ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து முதல்முறையாக தாராவியில் இன்று புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற நல்ல செய்தி வந்துள்ளது!

English summary
Dharavi Reports Zero Postive Cases since April 1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X