மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அந்த" 1:30 மணி நேரம்.. நைட் 7 மணிக்கு கரெக்ட்டா கரண்ட் போய்டுமாமே.. நம்ம ஊர்லதான்.. ஏன் தெரியுமா

மகாராஷ்டிரா கிராமத்தில் ஒன்றரை மணி நேரம் கரண்ட் கட் செய்யப்படுகிறது

Google Oneindia Tamil News

மும்பை: ஒரு கிராமத்தில், கரெக்ட்டா இரவு 7 மணி முதல் 8.30 மணி கரெண்ட் ஆப் செய்யப்பட்டு விடுகிறதாம்.. ஏன் தெரியுமா?

இப்போதெல்லாம் நம்மால் செல்போன் இல்லாமல் இருக்க முடிவதில்லை.. டிவி இல்லாமல் கூட இருந்துவிட முடியும் சூழலில், செல்போன் இல்லாமல் சான்ஸே இல்லை.
ஆனால், இது எல்லாவற்றிற்குமே அடிப்படை கரண்ட் என்பதை மறுக்க முடியாது.. அதுவும் இல்லாமல் இன்றைய சூழலில் மின்சாதனங்களின் பயன்பாடு இல்லாமல் எந்த வேலையையும் செய்ய முடியாத நிலைமையும் உருவாகிவிட்டது.

அடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கைஅடுத்த 3 மணி நேரங்களில்.. சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

 விசித்திரம்

விசித்திரம்

இப்படி செல்போன், டிவிக்கு அடிமையாகிவிடும் மனிதகுலத்தை நினைத்து யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.. ஆனால், ஒரு கிராமம் கவலைப்படுகிறது.. டிவி இல்லாமல், செல்போன் இல்லாமல் நம்மால் கொஞ்ச நேரமாவது இயல்பாக இருக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறது.. இந்த கிராமம் மகாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்டத்தில் உள்ளது.. அதன் பெயர் மோஹித்யாஞ்சே வத்காவோன்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்துள்ளார்கள்.. அதன்படி, தினமும் மாலை 7 மணி முதல், இரவு 8.30 மணி வரை செல்போன், டிவி, கம்ப்யூட்டர், டேப்லட் போன்ற அனைத்துவகையான எலக்ட்ரானிக் சாதனங்களையும் முற்றிலும் அணைத்து விடுகின்றனர்.. ஒருவேளை கரண்ட் இருந்தால், இவைகளை உபயோகிக்க சொல்லி, உள்உணர்வு தூண்டும் என்பதால், கரண்ட்டையே கட் செய்து விடுகிறார்கள்.. தினமும் நைட் 7 மணியானதும், அந்த கிராமத்தில் ஒரு சைரன் ஒலிக்குமாம்.. அந்த சத்தம் கேட்டதுமே கரண்ட்டை அணைத்து வைத்துவிடுவார்களாம்.

 விநோதம்

விநோதம்

இதைவிட இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? கரண்ட் போகும் அந்த ஒன்றரை மணி நேரத்தை, பயனுள்ள வகையில் செலவழிக்கிறார்களாம்.. புத்தகங்கள் படிப்பது அல்லது விளையாட்டு, என கற்றல் செயல்பாடுகளில் கிராம மக்கள் ஈடுபடுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஏதாவது சமூகத்தை தாக்கி கொண்டிருக்கும் ஒரு பிரச்சனையை கையில்எடுத்து, அது தொடர்பான விவாதங்களையும் நடத்துவார்களாம்.. இரவு 8.30 மணிக்கு மறுபடியும் சைரன் ஒலிக்கும்.. அப்போது கரண்ட் வந்ததும், எலக்ட்ரானிக் சாதனங்கள் பழையபடி ஆன் செய்யப்பட்டுவிடுமாம்...

 விசித்திர பழக்கம்

விசித்திர பழக்கம்

கிராம ஊராட்சி தலைவர் விஜய் மோஹிதே என்பவர் இப்படி ஒரு யோசனையை சொல்லி உள்ளார்.. முதலில் அந்த மக்கள் இதற்கு தயங்கி உள்ளனர்.. அதற்கு பிறகு, சமூக நல ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என பலரிடம் விஜய் சொல்லவும், அவர்கள் அந்த யோசனையை வரவேற்றதுடன், கிராம மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்... அதற்குபிறகுதான் கிராமத்தினர் இதற்கு சம்மதித்தார்களாம். கடந்த சுதந்திர தினத்தன்று இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளனர்.. அப்போதிருந்து அந்த கிராமத்தில் சைரனும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.. பயனுள்ள வகையில் அந்த ஒன்றரை மணி நேரத்தை கழிய ஆரம்பித்துவிட்டது.. டிஜிட்டல் நச்சு உலகத்திலிருந்து அம்மக்கள் விடுபடவும் ஆரம்பித்துவிட்டனர்.. சபாஷ்..!

English summary
Do you know why maharashtra village people follows digital detox every evening
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X