மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50 குண்டுவெடிப்புகள்.. ஆயுள் தண்டனை கைதி.. மாயமான Dr. Bomb’ கான்பூரில் கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    Jalees Ansari goes missing: Who is Jalees Ansari?

    மும்பை: பரோலில் வெளிவந்து மாயமான டாக்டர் பாம் இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியதில் முக்கிய பங்காற்றியவர். இவர் கடந்த காலங்களில் கொடூர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர் என்று போலீசார் சொல்கிறார்கள். இவரை போலீசார் கான்பூரில் கைது செய்தனர்.

    இந்தியாவில் மும்பை குண்டுவெடிப்பு, ராஜஸ்தான் பல வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியதில் பங்காற்றியதாக டாக்டர் ஜலீஸ் அன்சாரி என்பவர் மீது புகார் உள்ளது.

    இவர் 1993ஆம் ஆண்டு டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் 6 இடங்களில் குண்டுவெடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து ராஜஸ்தானின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் 1994ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் ஜலீஸ் அன்சாரியை கைது செய்தனர்.

    அம்மா, மகள்.. ஆளுக்கு ஒரு கள்ளக்காதலன்.. நடு ரோட்டில் இருவரும் சரமாரி மோதல்.. ஒரு உசுரு போச்சு! அம்மா, மகள்.. ஆளுக்கு ஒரு கள்ளக்காதலன்.. நடு ரோட்டில் இருவரும் சரமாரி மோதல்.. ஒரு உசுரு போச்சு!

    அஜ்மீர் சிறை

    அஜ்மீர் சிறை

    நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சம்பங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. புனேவில் 1992ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் இவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இதேபோல் ஹைதராபாத் குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. அன்சாரியை 'Dr. Bomb' என்றே அழைக்கிறார்கள். மலேகான் நீதிமன்றம் கிர்னா ஆற்றில் குண்டு வெடித்த வழக்கில் இவருக்கு 2018ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து. அஜ்மீர் சிறையில் இருந்து வந்தார். தற்போது அவருக்கு வயது 69.

    பரோலில் வந்தார்

    பரோலில் வந்தார்

    இந்நிலையில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஜலீஸ் அன்சாரி பரோலில் வந்துள்ளார். மும்பையில் உள்ள மொமின்புரா பகுதியில் உள்ள அவரது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளோடு கடந்த 20 நாட்களாக தங்கியிருந்தார்.

    போலீஸ் தேடுதல்

    போலீஸ் தேடுதல்

    டாக்டர் அன்சாரிக்கு வழங்கப்பட்ட 21 நாள் பரோல் காலம் முடியவுள்ள ஒரு நாள் முன்பு மும்பை வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். அவர், வீட்டிற்கு திரும்பவில்லை என்று அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்தார். இதையேற்று மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்புப்பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் மும்பை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக நிராகரிப்பு

    முன்னதாக நிராகரிப்பு

    அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து குற்றவாளியை தேடினார்கள். பொதுவாக குற்றவாளிகளுக்கு 15 முதல் 30 நாட்கள் பரோல் வழங்கப்படும். இதற்கு அவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும். சர்ச்சைக்குரியவர் என்பதால் அன்சாரியின் பரோல் மனு உள்ளூர் டிவிசனல் கமிஷ்னரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு செய்த அவர் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது பரோல் பெற்றார்.

    மாயமானதால் பரபரப்பு

    மாயமானதால் பரபரப்பு

    மும்பை போலீசார் ஆர்தூர் ரோடு சிறைக்கு வெள்ளிக்கிழமை அன்சாரியை ஒப்படைப்பதாக இருந்தனர்.அங்கிருந்து அஜ்மீர் சிறைக்கு அவரை திருப்பி அனுப்ப முடிவு செய்திருந்தனர். ஆனால் அன்சாரி வியாழக்கிழமை மாயமாகிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரமாக தேடிய போலீசார் அவரை உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கைது செய்தனர்.

    English summary
    Dr Jalees Ansari (69), notorious as ‘Dr Bomb’ involved in over 50 blasts across India, disappeared from his Mumbai home on Thursday morning, a day before his 21-day parole
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X