மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதார ஆய்வறிக்கையில் என்ன சொல்லிருக்கு பார்த்தீங்களா.. அப்போ, வருமான வரி சலுகை கேரண்டி?

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட்டில் கவனிக்கபட முக்கியமாக வேண்டிய விஷயங்கள் என்ன | Budget 2020: key things to watch for

    மும்பை: ஏப்ரல் 1 முதலான, அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. எனவே தனி நபர் வருமான வரிச் சலுகை அதிகரிக்கலாம் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.

    நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், மரபுப்படி, இன்று, பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பட்ஜெட் எந்த அடிப்படையில் இருக்கும் என்பதற்கான ஒரு வழிகாட்டியாக, பொருளாதார ஆய்வறிக்கை பார்க்கப்படும். எனவே இந்த அறிக்கை முக்கியமானது.

    பொருளாதார ஆய்வறிக்கையில் என்ன சொல்லியுள்ளது என்பது குறித்து, முழு விவரத்தையும் இதோ பாருங்கள்:

    அருமையான திருக்குறளை சொல்லி.. பட்ஜெட் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அருமையான திருக்குறளை சொல்லி.. பட்ஜெட் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    வலுவான பொருளாதாரம்

    வலுவான பொருளாதாரம்

    2020-21 ஆம் ஆண்டின் வளர்ச்சி 2019-20 ஆம் ஆண்டின் 5 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் குறைப்பது, நிதித்துறை மந்த நிலைதான். அரசு வலுவான பெரும்பான்மை பலத்தோடு உள்ளது. எனவே, பொருளாதார சீர்திருத்தங்களை விரைவாக்க இதுதான் காலம். இது 2020-21 ஆம் ஆண்டில் பொருளாதாரம் வலுவாக முன்னேற உதவும்.

    செல்வம்

    செல்வம்

    நாட்டின், செல்வம் விநியோகிக்கப்பட வேண்டும். முதலில் செல்வத்தை உருவாக்க வேண்டும். செல்வத்தை உருவாக்குபவர்களை மரியாதையுடன் பார்க்க வேண்டும். வெங்காயம் போன்ற பொருட்களின் விலையை சரிப்படுத்த அரசாங்கத்தின் தலையீடுகள் பயனற்றதாகத் தெரிகிறது. வளர்ச்சியை அதிகரிப்பதற்காக, வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். பொருட்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய வேண்டும்.

    சிவப்பு நாடா

    சிவப்பு நாடா

    வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு, ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு, துறைமுகங்களில் சிவப்பு நாடா நடைமுறையை அகற்ற வேண்டும். வணிகங்களை துவங்குவதை, எளிதாக்குவதற்கும், சொத்துக்களை பதிவு செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும், ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கும் எளிதாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

    வரிச் சலுகை

    வரிச் சலுகை

    பொருளாதார ஆய்வறிக்கை இவ்வாறு கூறுவதை பார்த்தால், கண்டிப்பாக நாளைய பட்ஜெட்டில், வரிச் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று, எதிர்பார்க்கலாம். ஏனெனில், வளர்ச்சி மிக மோசமாக இருந்தால், தனி நபர் வருமான வரிச் சலுகை உள்ளிட்டவற்றை அமல்படுத்தி நிதிப் பற்றாக்குறையில் சிக்கிக் கொள்ள வேண்டுமா என அரசு யோசித்து வந்தது. ஆனால், பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டைவிட அதிகமாக இருக்கும் என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது. எனவே வருமான வரியில் நல்ல சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.

    English summary
    The Economic Survey on Friday projected India's economic growth at 6 per cent to 6.5 per cent in the next financial year starting April 1, saying growth has bottomed out. The growth in 2020-21 compares to a projected 5 per cent expansion in 2019-20. "The deceleration in GDP growth can be understood within the framework of a slowing cycle of growth with the financial sector acting as a drag on the real sector," it said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X