மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் விடிய விடிய அமலாக்கத்துறை ரெய்டு.. அழைத்துச் சென்று விசாரணை

Google Oneindia Tamil News

மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல், ரெய்டு நடத்தினர். இதையடுத்து, அமலாக்கத்துறை தங்கள் அலுவலகம் அழைத்துச் சென்று, ராணா கபூரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    அதிரடி..YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ

    யெஸ் வங்கி, கடன்களை வாரி வழங்கியதால் வாரா கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் சிக்கியது அந்த வங்கி. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தி உள்ளது.

    ED questions Yes Bank founder Rana Kapoor

    இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. வாடிக்கையாளர்கள் யெஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அவசர தேவைகளுக்கு மட்டும் சலுகைகள் உண்டு என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் ரெய்டு நடத்தினர். பல நிறுவங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. காலை வரை ரெய்டு தொடர்ந்தது. ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்தது.

    யெஸ் பேங்க் இந்த நிலைக்கு வர காரணம் காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.. நிர்மலா சீதாராமன் ஒரே போடு யெஸ் பேங்க் இந்த நிலைக்கு வர காரணம் காங்கிரஸ் கூட்டணி அரசுதான்.. நிர்மலா சீதாராமன் ஒரே போடு

    வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு பிறகு, ராணா கபூரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச்சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணா கபூர் காலத்தில்தான் அதிக வராக் கடன்கள் கொடுக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

    English summary
    Crisis-hit Yes Bank's founder Rana Kapoor was brought to the the Enforcement Directorate's (ED) office in Mumbai for questioning in connection with a money-laundering case against him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X