மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாவ்.. ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி.. உத்தவ் தாக்ரே அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார் அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின்போது பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றிருந்த போதிலும் கூட, முதல்வர் பதவி யாருக்கு என்ற பிரச்சினையில் கூட்டணி உடைந்தது.

Farm loans up to Rs 2 Lakh to be waived off, says Maharashtra, CM Uddhav Thackeray

இதையடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது சிவசேனா. அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக சுமார் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதாக அவர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை வாங்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் அவர் அறிவித்தார். 'மகாத்மா ஜோதிராவ் புலே கடன் தள்ளுபடி திட்டம்' என்று இது அழைக்கப்படும் என்றார் அவர்.

வடமாநிலங்கள் பசுவின் பேரில் நடந்த கொலைகளை பற்றி பேசாத ரஜினி இப்போது பேசுவது ஏன்?.. தமிமுன் அன்சாரிவடமாநிலங்கள் பசுவின் பேரில் நடந்த கொலைகளை பற்றி பேசாத ரஜினி இப்போது பேசுவது ஏன்?.. தமிமுன் அன்சாரி

சிவசேனா-காங்கிரஸ்-என்.சி.பி கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத் தொடரின் இன்றைய கடைசி நாளில் இந்த அறிவிப்பை உத்தவ் தாக்ரே வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் உத்தவ் தாக்ரே 2 லட்சம் வரையிலான விவசாய கடனைத்தான் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இதை ஏற்க முடியாது என கூறி சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அக்டோபரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விவசாய கடன் தள்ளுபடி ஒரு முக்கிய பிரச்சினையாக பிரச்சாரங்களின்போது முன் வைக்கப்பட்டது.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் 105 இடங்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவானது. ஆனால் 145 எம்எல்ஏக்களாவது பெரும்பான்மையை எட்டுவதற்குத் தேவை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காங்கிரஸ், என்சிபியுடன் சேர்ந்து, சிவசேனா முதல்வர் பதவியை பெற்றுவிட்டது.

English summary
Farm Loans Up To Rs 2 Lakh To Be Waived In Maharashtra, says CM Uddhav Thackeray.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X