தாலி கட்டிக் கொள்ள தயாரான மகள்! தந்தை செய்த மிகக் கோவலமான செயல்! இப்படி எல்லாம் கூட நடக்குமா..?
மும்பை : மகராஷ்டிரா மாநிலம் புனே அருகே தனது 14 வயது மகளுக்கு திருமணம் செய்ய முயற்சித்ததோடு, அவரை 3 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 68 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மகராஷ்டிரா, அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ராஜாஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மைனர் சிறுமிகளுக்கு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றனர்.
பெண் பலாத்காரம்! கொன்று எரித்த வடமாநில இளைஞர்கள்! மக்களின் ஆவேச போராட்டத்தால் ஸ்தம்பித்த ராமேஸ்வரம்

அதிர்ச்சி சம்பவம்
2020ஆம் ஆண்டில், நாட்டிலேயே அதிக பலாத்கார வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மட்டும் 5,310 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானை தொடர்ந்து உத்தரபிரதேசம் 2,769 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. அடுத்ததாக மொத்தம் 2,339 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மகராஷ்டிரா மாநிலம் புனே அருகே தனது தனது 14 வயது மகளை 3 மாதங்களுக்கும் மேலாக பலமுறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் 68 வயது தந்தையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 18 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தனது 14 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் புதன்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல்
ஹடப்சர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திகாம்பர் சொன்டக்கே இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "தன் செயல்கள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அந்த நபர் தனது மகளை மிரட்டியுள்ளார். ஆனாலும், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் தாயிடம் கூறியதை தொடர்ந்து அவளுடைய பெற்றோருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் அந்த நபர் தனது மனைவியையும் தாக்கியுள்ளார். சமீபத்தில், இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்த போது இது குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தை கைது
இது குறித்து காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் தனது மனைவி வீட்டில் இல்லாத போது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியதாகவும், பலமுறை அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.