மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்த பஞ்சாயத்து.. பெண் போலீஸை தாக்கியதாக புகார்.. முன்ஜாமீன் கோரிய அர்னாப் கோஸ்வாமி தம்பதி

Google Oneindia Tamil News

மும்பை: பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அவரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன்கோரி அர்னாப் கோஸ்வாமியும் அவரது மனைவியும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்ஜாமீன் மனுவை செசன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2018-ம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் ஒருவர் செய்த பணிகளுக்கு பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவர் தற்கொலை செய்ததாக சொல்லப்படுகிறது..

இந்த விவகாரத்தில் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட சிலர் தற்கொலைக்கு தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

விடுதலையாகிறார் அர்னாப் கோஸ்வாமி.. இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு! விடுதலையாகிறார் அர்னாப் கோஸ்வாமி.. இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 விசாரணை

விசாரணை

ஆனால், அந்த வழக்கு அப்போதே முடித்து வைக்கப்பட்டது என்றாலும், மறுபடியும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் உள்ளரங்கு வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.. மேலும் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீனும் வழங்கியது.

 தாக்குதல்

தாக்குதல்

ஆனால், இந்த விவகாரம் அத்துடன் முடியவில்லை.. கடந்த 4-ம்தேதி லோவர் பரேலில் பகுதியில் உள்ள வீட்டில் அர்னாப் கோஸ்வாமி இருந்தபோது, போலீஸார் அவரை கைது செய்ய முயன்றபோது, பெண் போலீஸார் ஒருவரை அர்னாப் தாக்கியதாக மற்றொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

 கைது

கைது

இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான அர்னாப் கோஸ்வாமி மீது பெண் போலீஸாரை தாக்கிய வழக்கை என்.எம்.ஜோஷி மார்க் போலீஸார் பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் பெற்று வெளியே வந்துவிட்ட நிலையில், பெண் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் அவரைக் கைது செய்ய மும்பை போலீஸார் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்தன.

 விசாரணை

விசாரணை

எனவே, தன்னுடைய வழக்கறிஞர் பிபி ஜாதவ் மூலம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அர்னாப்பும் அவரது மனைவியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி இல்லாததால், மனுவை வரும் 23-ம் தேதி விசாரிக்கப் பட்டியலிடப்பட்டது... எனவே வரும் 23-ம் தேதி இந்த தம்பதிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற அடுத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

English summary
Female Cop assault case pre bail Arnab wife filed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X