மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

129 ஆண்டுகளுக்குப் பின் கடலோர மகாராஷ்டிராவை ஜூனில் தாக்க காத்திருக்கும் புயல்

Google Oneindia Tamil News

மும்பை: 129 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலோர மகாராஷ்டிரா பகுதிகளை ஜூன் மாதத்தில் தாக்க காத்திருக்கிறது அரபிக் கடல் புயல்.

Recommended Video

    களை கட்டும் தென்மேற்கு பருவமழை | புயலால் மும்பையில் மழை

    அரபிக் கடலில் மகாராஷ்டிராவின் மும்பை கடற்பரப்பில் நிசாரிகா புயல் உருவாகி உள்ளது. இது ஜூன் மாதத்தில் அரபிக் கடலில் நிகழும் அரிய நிகழ்வு என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

    First tropical cyclone since 1891 may hit Maharashtra?

    1891-ம் ஆண்டில் இருந்து இதுவரை வடக்கு இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலைகள் புயலாக உருவானதும் இல்லை. இது மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் ஜூன் மாதத்தில் கரையை கடந்ததும் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்,

    1948, 1980-ம் ஆண்டுகளில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மட்டுமே இந்த பகுதியில் உருவாகின. ஆனால் அவை ஜூன் மாத புயலாக உருமாறவில்லை. தற்போதைய நிசாரிகா புயலால் நாளை மகாரஷ்டிராவில் பெரும் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    First tropical cyclone since 1891 may hit Maharashtra?

    இதனையடுத்து மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நிசாரிகா புயல், மகாராஷ்டிராவின் வடக்கு மற்றும் குஜராத்தின் தென் எல்லையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்களில் ஒருதரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

    "மூச்சு திணறுது".. கருப்பின இளைஞரை கொன்ற போலீஸ்காரருக்கு.. நோட்டீஸ் அனுப்பிய மனைவி!

    கொரோனா துயரம்

    மகாராஷ்டிராவில் ஏற்கனவே கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பும் மரணங்களும் மிக அதிகமாக நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் புதிய புயல் தாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India Meteorological Department confirmed that weather system in the Arabian Sea would intensify into a tropical cyclone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X