மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய ஜிடிபி எதிர்மறையாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி! வங்கி கடன் ஒத்திவைப்பு என்னாகும்?

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் இன்று பேட்டியளித்தபோது இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை, கடனை திருப்பி செலுத்துவதற்கு நெருக்கடி தரக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வழங்கிய சலுகை இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த மாதம் முதல் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கடனை கேட்க உள்ளன. எனவே கடன் ஒத்திவைப்பு உத்தரவை மேலும் சில மாதங்கள் நீட்டிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்புகள் இல்லை, தொழில் நலிவடைந்து உள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடன் சலுகை அறிவிப்பை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர்.

முன்பு vs இப்போது.. வெளியான பெய்ரூட் புகைப்படங்கள்! வெடி விபத்தால் ஒரே நகரமே இப்படி மாறிப்போகுமா OMGமுன்பு vs இப்போது.. வெளியான பெய்ரூட் புகைப்படங்கள்! வெடி விபத்தால் ஒரே நகரமே இப்படி மாறிப்போகுமா OMG

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

ஆனால் அதுபற்றிய அறிவிப்பு இன்றைய பேட்டியில் வெளியாகவில்லை. ரிசர்வ் வங்கி ஆளுநர் மேலும் கூறியதாவது: 2020 முதல் பாதியில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் குறைந்துள்ளன

ஜிடிபி நெகட்டிவ்

ஜிடிபி நெகட்டிவ்

பொருளாதார நடவடிக்கைகள் மீண்ட நேரத்தில், லாக்டவுன் விதிக்கப்படுவதால் மீண்டும் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
விநியோக சங்கிலியில் இடையூறுகள் தொடர்கின்றன. பணவீக்க அழுத்தங்களும் உள்ளன. ஆண்டின் முதல் பாதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைவாக இருக்கும். ஒட்டுமொத்தமாக, 2020-21ம் ஆண்டில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும், என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

தொழில்துறை வளர்ச்சிக்கு கடன் அவசியம். எனவே, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், முதன்மைத் துறைகளுக்கான கடன் ஸ்டேடஸ் வழங்கப்படுகிறது. தேசிய வீட்டுவசதி வங்கிக்கு ரெப்போ விகிதத்தில் ரூ .10,000 கோடி கூடுதல் நிதி வழங்கப்படும். இதனால் வீட்டு வசதிக்கான கடன் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

தங்கம் மீது கடன்

தங்கம் மீது கடன்

கொரோனா பாதிப்புக்கு பிறகு, தங்கம் மீதான கடன் வழங்கும் மதிப்பை அதிகரித்துள்ளோம். முன்பு தங்கத்தின் 75 சதவீத மதிப்பிற்கு கடன் வழங்கப்பட்டது. இதை 90 சதவீதமாக அதிகரித்துள்ளோம். இவ்வாறு, ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

English summary
Rs 10,000 cr additional liquidity facility to be provided by NHB, NABARD, says RBI Governor Das.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X