மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகளை கொன்றதால் சிறைவாசம்.. விவாகரத்து செய்து சிறையிலேயே பிரிந்த இந்திராணி முகர்ஜி தம்பதி

Google Oneindia Tamil News

Recommended Video

    Peter, Indrani Granted Divorce By Mumbai Court | விவாகரத்து செய்து பிரிந்த இந்திராணி முகர்ஜி தம்பதி

    மும்பை: ஐஎன்எக்ஸ் மீடியா முன்னாள் நிறுவனர்கள் இந்திராணி முகர்ஜிக்கும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜிக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இருவரும் ஷீனா போரா கொலை வழக்கில் 2015ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளனர்.

    47வயதாகும் இந்திராணி முகர்ஜியும், 65 வயதாகும் பீட்டர் முகர்ஜியும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை கடந்த 2006ம் ஆண்டு தொடங்கினர்.

    இந்திராணி முகர்ஜி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இவரது மகள் ஷீனா போரா (24 வயது) வேறு ஒரு ஆணுடன் உறவில் இருந்துள்ளார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த இந்திராணி தனது மகளை கடந்த 2012 ம் ஆண்டு கொலை செய்தார். இந்நிலையில் 2015ம் ஆண்டு இந்திராணியின் முன்னாள் கார் டிரைவர் ஷியாம்வார் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட போது தான் இந்திராணி மகளை கொலை செய்த விஷயம் தெரியவந்தது.

    இந்திராணி கணவருடன் கைது

    இந்திராணி கணவருடன் கைது

    இதையடுத்து இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகிய இருவரையும் மும்பை போலீசார் 2015ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து இருவரும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

     இருவரும் விவாகரத்து

    இருவரும் விவாகரத்து

    இந்நிலையில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்தனர். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் பந்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்திராணிக்கு விவாகரத்து

    இந்திராணிக்கு விவாகரத்து

    இருவருக்கும் மூன்று முறைகவுன்சிலிங் கொடுத்தும் பிரிந்து செல்வது உறுதி என இருவரும் அறிவித்தனர். இந்திராணி முகர்ஜி திருமணம் மீள முடியாதளவுக்கு முறிந்துவிட்டது" மற்றும் திருமண உறவு நல்லப்படியாக செல்வதற்கு வாய்ப்பில்லை விவாகரத்து வழங்கிவிடுங்கள் என்று கோரியிருந்தார். இதையடுத்து நேற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பலகோடி சொத்துக்கள் உள்ளது

    பலகோடி சொத்துக்கள் உள்ளது

    இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு ஸ்பெய்ன், லண்டனில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. மேலும் வங்கியில் ஏராளமான பணம் மற்றும் முதலீடுகள் உள்ளன. இவற்றையும் விவாகரத்தின் போது சரி பாதியாக பிரித்து செட்டில்மெண்ட் செய்து கொண்டனர்.

    பாய்குல்லா சிறையில் இந்திராணி

    பாய்குல்லா சிறையில் இந்திராணி

    மகளை கொன்ற வழக்கில் இந்திராணி முகர்ஜி பாய்குல்லாவில் உள்ள பெண்கள் சிறையிலும், பீட்டர் முகர்ஜி மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்திராணியின் வாக்குமூலம்

    இந்திராணியின் வாக்குமூலம்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் ப சிதம்பரம் கைது ஆவதற்கு இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலம் தான் காரணம் ஆகும். அந்நிய முதலீட்டை அனுமதிக்க ப சிதம்பரத்தை சந்தித்ததாக இந்திராணி முகர்ஜி கூறியருந்தார்.

    English summary
    former inx media founders, Peter and Indrani Mukerjea granted divorce by mumbai court.. both facing trial in the Sheena Bora murder case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X