மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. கண்காணிப்புக்கு இடையே ஆஸ்பத்திரியிலிருந்து எஸ்கேப்பான 5 பேர்.. நாக்பூரில் பரபரப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், கொரோனா தாக்கியிருப்பதாக, சந்தேகத்தின் பெயரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஐந்து பேர் அங்கிருந்து சொல்லிக் கொள்ளாமல் தப்பியோடிவிட்டனர். அதில் நான்கு பேர் மறுபடியும் மருத்துவமனை திரும்பியுள்ளனர்.

Recommended Video

    தொடர்ந்து பரவும் கொரோனா... இந்தியாவில் பாதிப்பு 100 ஆனது

    இதுகுறித்து நாக்பூர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. ஐந்து பேர் ரத்தமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்று ரிசல்ட் வந்தது. மற்ற நான்கு பேருக்கும், ரிசல்ட் வர வேண்டியது பாக்கி இருந்தது. இந்த நிலையில் அவர்கள் 5 பேரும் தப்பி சென்று விட்டனர். அவர்களை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம், என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Four suspected patients who had left Nagpur hospital returned

    நொறுக்குத் தீனி வாங்கி விட்டு வருவதாக கூறிவிட்டு, அவர்கள் வெளியே சென்றதாகவும், அதன் பிறகு மருத்துவமனைக்கு அவர்கள் திரும்பவில்லை என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில், தகவல் வெளியாகி சில மணி நேரங்கள் கழித்து, நான்கு பேரும் மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளனர்.

    கொரோனா ஒரு தொற்று நோய்.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.. தகவல் சொல்லாமல் சிகிச்சையளிக்க கூடாதுகொரோனா ஒரு தொற்று நோய்.. அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.. தகவல் சொல்லாமல் சிகிச்சையளிக்க கூடாது

    முன்னதாக மகாராஷ்டிராவில் மும்பை, நவி மும்பை, நாக்பூர், பிம்ப்ரி சின்சவாத், புனே உள்ளிட்ட நகரங்களில் தியேட்டர்கள், மால்கள், வரும் 30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நாக்பூரில் என்று மட்டும் கிடையாது. இன்னும் பல மாநிலங்களிலும் இதுபோல, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து, பலரும் சொல்லிக் கொள்ளாமல் சென்றுவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் சமுதாயத்தில் பிறருடன் கலந்து பேசும் போது, அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    English summary
    Four suspected patients who had left Nagpur hospital without permission and returned later test negative for coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X