மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

மும்பை: சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் வானில் பலூன்களை பறக்க விட்டு, இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Friends of #KulbhushanJadhav celebrate after International Court of Justice

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க, சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல் யூசூப் உத்தரவிட்டுள்ளார். குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யவும் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ் குல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்

கடந்த 2017-ம் ஆண்டு உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரியான, குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக அனுமதி வழங்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை, நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Friends of #KulbhushanJadhav celebrate after International Court of Justice, #ICJ rules in favour of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X