மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மும்பையில் மருந்து நிறுவனத்தில் கேஸ் கசிவு..செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம்.. மக்கள் அச்சம்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருந்து நிறுவனத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் அழுகிய நாற்றம் பரவியதாக தகவல்கள் எழுந்தன. இதுதொடர்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மும்பையின் கோவண்டியில் வைட்டமின் தயாரிக்கும் அமெரிக்காவின் மருந்து நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று இரவு 9.50 மணிக்கு அந்த நிறுவனத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டது.

Gas leakage in Pharma company gives panic to residents in Mumbai

இதையடுத்து மும்பை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோட்காபார், செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அழுகிய நாற்றம் வீசுவதாக மும்பை தீயணைப்பு துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அந்த இடங்களுக்கு சென்ற அவர்களுக்கும் அழுகிய நாற்றம் ஏற்பட்டது. அந்த நிறுவனத்திலிருந்து கேஸ் கசிவிற்கான உடனடி காரணம் என்னவென தெரியவில்லை. அந்த பகுதிகளில் ஜன்னல், கதவுகளை மூடியபிறகும் துர்நாற்றம் வீசியதாக புகார் அளித்தனர்.

எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்எச்சரிக்கையுடனும் நம்பிக்கையுடனும் நாளை முதல் கோயில்களை திறக்க தயாராகும் மாநிலங்கள்

துர்நாற்றத்தை போக்க 17 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டன. செம்பூர், கோட்காபார், போவாய், அந்தேரி, மன்குர்து ஆகிய பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் ஈரத்துணியை நனைத்து முகத்தில் கட்டிக் கொள்ளவும் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அஞ்ச வேண்டாம் என்றும் மற்றவர்களையும் அச்சுறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.

Recommended Video

    கொட்டி தீர்த்த கனமழை... நிசார்கா கரையை கடக்கும் வீடியோ
    Gas leakage in Pharma company gives panic to residents in Mumbai

    கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செம்பூரில் உள்ள ரசாயன உரத் தொழிற்சாலையில் கேஸ் கசிவு ஏற்பட்டது. ஆனால் இது எங்கிருந்து கசிந்தது என தெரியவில்லை. அதுபோன்ற ஒரு சம்பவம் சுமார் 9 மாதங்கள் கழித்து தற்போது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Gas leakage in Pharma company gives panic to residents in Mumbai. BMC asks dont panic. Situation is under control.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X