மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சைக்கிள் கேப்பில் நுழையும் கெஜ்ரிவால்.. "நாங்க இருக்கோம், வாங்க.. வாரிசுக்கு அழைப்பு.. பாஜக எரிச்சல்

மனோகர் பாரிக்கர் மகனுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

மும்பை: பாஜக தடுக்கி விழும் இடத்திலெல்லாம் ஆம் ஆத்மி உள்ளே புகுந்து பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.. அந்த வகையில், மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு பாஜக சீட் தராத நிலையில், தன்னுடைய ஆதரவு கரத்தை வெளிப்படையாகவே நீட்டி உள்ளது ஆம் ஆத்மி..!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..

வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்க உள்ளது.. இந்த மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பும் வெளியாகியது.

எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.. திடீரென சீறிய அமைச்சர் சக்கரபாணி.. என்ன நடந்தது? எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.. திடீரென சீறிய அமைச்சர் சக்கரபாணி.. என்ன நடந்தது?

மம்தா

மம்தா

எனவே, காங்கிரஸ், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட மும்முரமாகி வருகின்றன.. மற்றொரு பக்கம் சீட் பஞ்சாயத்து ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது.. ஆளும் கட்சியான பாஜக 34 பேர் கொண்ட தன்னுடைய வேட்பாளர் லிஸ்ட்டை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது.. அதில் பானாஜி சட்டப்பேரவை தொகுதியில் அதனாசியோ பாபுஷ் மான்செரேட் என்பவருக்கு பாஜக சீட் தந்துள்ளது..

 வேட்பாளர்

வேட்பாளர்

இதற்கு மனோகர் பாரிக்கர் மகன் உத்பால் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.. காரணம், மான்செரேட் மீது குற்ற வழக்குகள் உள்ளதாம்.. அவரை வேட்பாளராக நிறுத்த போவதாக ஏற்கனவே உத்பாலுக்கு தகவல் தெரிந்துள்ளது.. அப்போதே அதற்கு கண்டனமும் தெரிவித்தார்.. ஆனாலும் அவர் பேச்சை பாஜக காதிலேயே வாங்கவில்லை.. இறுதியில் வேட்பாளராக அறிவித்தும் விட்டது.. அதுமட்டுமல்லாமல், வேறு 2 தொகுதிகளை தந்து, இவைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் போட்டியிடுங்கள் என்று உத்பாலுக்கு பாஜக ஆப்ஷனையும் தந்துள்ளது..

 பிடிவாதம்

பிடிவாதம்

ஆனால், உத்பால் தனக்கு பானாஜி தொகுதிதான் வேண்டும் என்று பிடிவாதமாக கேட்டிருக்கிறார்.. இந்த கோரிக்கையையும் பாஜக கண்டுகொள்ளவில்லை என்பதால், உத்பால் பாரிக்கர் உச்சக்கட்ட அதிருப்திக்கு ஆளானார்... என்ன முடிவு எடுக்க போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, விரைவில் சொல்கிறேன் என்று உத்பால் பஞ்ச் வைத்து பேசிவிட்டு போனார்.. இதுவரை எதையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை..

கொள்கை

கொள்கை

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.. இது தொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.. அதில், "பாரிக்கர் குடும்பத்துடன், பாஜக யூஸ் அண்ட் த்ரோ கொள்கையை கடைப்பிடித்ததை கோவா மக்கள் வருத்தம் கொள்கிறார்கள்... மனோகர் பாரிக்கர் ஜி மீது எனக்கு எப்போதுமே மதிப்பு உள்ளது.. உத்பால் ஜி, ஆம் ஆத்மி கட்சிக்கு வரவேற்கிறேன். ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிடுங்கள்" என்று பதிவு செய்துள்ளார்... அத்துடன், கோவா பாஜக வேட்பாளர்கள் குறித்து செய்தி வீடியோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

பேட்டி

பேட்டி

இதனிடையே, கோவா அமைச்சரான விஸ்வஜித் ரானே இந்த விவகாரம் குறித்து ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஒருத்தருடைய மகன் என்பதற்காகவே பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காது. முதலில் கட்சிக்காக வேலையை பாருங்கள்.. நிறைய கற்று கொள்ளுங்கள்... அதுக்கப்பறம் தேர்தல் களத்துக்கு வாங்க.. நானும் கூட எடுத்தவுடன் இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை.. படிப்படியாக, கட்சி வேலையை பார்த்துவிட்டுதான், இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்... என்னுடைய தனிப்பட்ட அட்வைஸ் என்னவென்றால், உங்க அப்பா இந்த பாஜகவை வளர்த்தவர்.. அவர் வளர்த்த கட்சிக்கு எதிராக புரட்சி செய்யாமல் இருங்கள்.. அதுவே போதும்' என்று கூறியுள்ளார்.

 கெஜ்ரிவால்

கெஜ்ரிவால்

எனினும், "நாங்க இருக்கோம், இங்கே வாங்க" என்று கெஜ்ரிவால் உத்பாலை அழைத்துள்ளது பாஜகவுக்கு எரிச்சலை கூட்டி வருகிறது.. இங்கு மட்டுமில்லை, எங்கெல்லாம் பாஜக சறுக்கலில் விழுகிறதோ, அந்த இடத்தை கெஜ்ரிவால் வேகமாக நிரப்பி விடுகிறார்.. தன்னுடைய பலத்தையும் அங்கே கூட்டி வருகிறார்.. இதன்காரணமாக பஞ்சாப் உட்பட கோவா வரை, பாஜகவுடன் நேருக்கு நேர் மோதுவது ஆம் ஆத்மியாகவே இருந்து வருவது கவனிக்கத்தக்கது..!

English summary
Goa Assembly Election 2022: Come join us, Kejriwal to Parrikar after BJP denies ticket
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X