மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவசேனா 3 நாட்கள் அவகாசம் கேட்டது.. வழங்க முடியாது.. ஆளுநர் மாளிகை அதிரடி அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவை பாஜக விட்டு கொடுக்க என்ன காரணம்?

    மும்பை: சிவசேனா கோரிய, மூன்று நாட்கள் கால அவகாசத்தை வழங்க முடியாது என்று மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவை ஆளுநர் அழைத்திருந்தார். திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் கெடு விதித்திருந்தார்.

    Governor of Maharashtra denied to give further extension to Shiv Sena

    இந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிவசேனா கட்சியை சேர்ந்த குழு, ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர். அப்போது பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் பலத்தை காண்பிப்பதற்கு மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க மேலும் 1 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா- ஆளுநர் நிராகரித்ததால் பரபரப்பு!மகாராஷ்டிரா: ஆட்சி அமைக்க மேலும் 1 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா- ஆளுநர் நிராகரித்ததால் பரபரப்பு!

    இந்த நிலையில் இரவு 8.15 மணியளவில் ஆளுநர் மாளிகை ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பது: சிவசேனா தலைவர்கள் குழு ஒன்று ஆளுநரை சந்தித்து அரசு அமைப்பதற்கு தங்களுக்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தது. அதேநேரம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை, அவர்கள் வழங்கவில்லை. மேலும், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவை காண்பிப்பதற்கு மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு ஒரு கடிதத்தை வழங்கினார். இருப்பினும், இதற்கு மேல் கால அவகாசம் தர முடியாது என்று ஆளுநர் தெரிவித்து விட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Governor of Maharashtra: Delegation of Shiv Sena met Guv&expressed willingness to form govt. However, they couldn't submit requisite letter of support.They submitted letter requesting 3-day extension for submitting letters of support.Guv expressed inability to give further extension
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X