மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்தம்பிக்கிறதா இந்திய பொருளாதாரம்? முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி 0.2% வீழ்ச்சி

Google Oneindia Tamil News

மும்பை: நாட்டில், முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி 0.2 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த 8 துறைகளுக்கான வளர்ச்சி இலக்கு என்பது, 5.1 என்பதிலிருந்து 4.3 சதவீதமாக அரசால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், எஃகு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய இந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால் இப்போது அது, 0.2 சதவீதம் குறைந்துள்ளது.

Growth of 8 core sectors slows to 0.2 per cent in June

இந்த 8 துறைகளும்தான், நாட்டின் மொத்த தொழில் உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீத பங்களிப்பை வைத்துள்ளன.

'சுத்திகரிப்பு தயாரிப்புகளின்' உற்பத்தி தொடர்ச்சியாக இரண்டாவது மாதமும் நெகட்டிவ் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 9.3 சதவீதமாக இவற்றின் வளர்ச்சி இருந்தது, ஆனால் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், சுத்திகரிப்பு தயாரிப்புகள் உற்பத்தி 12.1 சதவீத வளர்ச்சியில் இருந்தது.

முந்தைய மாதங்களில் வளர்ச்சியைக் காட்டிய சிமென்ட் உற்பத்தி இப்போது எதிர்மறையாக மாறிவிட்டது. சிமென்ட் உற்பத்தி எதிர்பார்த்ததைவிட 1.5 சதவீதம் குறைவாகும். இருப்பினும், எஃகு மற்றும் மின்சார உற்பத்தி முறையே 6.9 சதவீதம் மற்றும் 7.3 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரப்படி, கடந்த ஜூன் மாதத்தில் தொழில்துறைக்கான கடன் 6.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்ட அளவைவிடவும், 0.9 சதவீதம் குறைவாகும்.

தொழில்துறைக்குள், உள்கட்டமைப்பு, ரசாயன மற்றும் ரசாயன பொருட்கள், வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள், சிமென்ட் மற்றும் சிமென்ட் பொருட்கள் மற்றும் பொறியியல் துறைகளுக்கான கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளன.

இருப்பினும், அடிப்படை உலோகம் மற்றும் உலோக தயாரிப்புகள், ஜவுளி; உணவு பதப்படுத்துதல், கட்டுமானம் ஆகியவற்றுக்கான கடன் வழங்கும் வளர்ச்சி குறைந்துள்ளது.

English summary
Growth of eight core industries dropped to 0.2 per cent in June, mainly due to contraction in oil-related sectors as well as cement production, according to official data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X