மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சில வருடங்களில் மும்பையே இருக்காது.. கேரளாவிற்கும் ஆபத்து.. வெளியான ஷாக்கிங் ஆய்வறிக்கை!

மும்பையில் பெரும்பாலான பகுதியில் இன்னும் சில வருடங்களில் மொத்தமாக கடலுக்குள் செல்லும் என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rising Seas Will Erase More Cities by 2050, New Research Shows

    மும்பை: மும்பையில் பெரும்பாலான பகுதியில் இன்னும் சில வருடங்களில் மொத்தமாக கடலுக்குள் செல்லும் என்று ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

    உலகம் அழிய போகிறது, பெரிய நகரங்கள் அழிய போகிறது என்று வருடா வருடம் நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாவது இயல்புதான். தற்போது இது போன்ற கட்டுரைகளில் எண்ணிக்கை அடிக்கடி வெளியாகி வருகிறது. இதில் நிறைய பொய்யான கட்டுரைகளும் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில்தான் அமெரிக்காவில் உள்ள கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் சார்பாக முக்கியமான ஆய்வு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.ஆனால் இந்த கட்டுரை கொஞ்சம் வித்தியாசமானது.

    செம்ம.. செம்ம.. தமிழகத்திற்கு மிக சிறந்த நாள்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. என்ன சொல்கிறார்?!செம்ம.. செம்ம.. தமிழகத்திற்கு மிக சிறந்த நாள்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. என்ன சொல்கிறார்?!

    எப்படி செய்வார்கள்

    எப்படி செய்வார்கள்

    பொதுவாக கடல் மட்டம் உயர்வதை செயற்கைகோள் கொண்டுதான் கணித்து வருகிறார்கள். ஆனால் செயற்கைக்கோள் ஒரு பகுதியை கடல் ஆக்கிரமித்த பிறகுதான் கண்டுபிடிக்க முடியும். இதில் நிறைய தவறுகள் நடக்கும். இந்த நிலையில்தான் கடல் எவ்வளவு வேகமாக நிலப்பகுதியை ஆக்கிரமித்து வருகிறது என்று ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது.

    யார்

    யார்

    கிளைமேட் சென்ட்ரல் நிறுவனம் சார்பாக ஸ்காட் ஏ குல்ப், பெஞ்சமின் ஸ்ட்ராஸ் ஆகியோர் சேர்ந்து இந்த ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒவ்வொரு கடல் பகுதியையும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். மிக துல்லியமாக கடல் மட்டம் உயர்வதை இவர்கள் கணித்த்துள்ளனர். செயற்கைகோள் எங்கே தப்பு செய்கிறது, உண்மையில் கடல் மட்டம் எவ்வளவு வேகமாக உயர்ந்து வருகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

     நினைத்ததை விட வேகம்

    நினைத்ததை விட வேகம்

    அதன்படி உலகம் முழுக்க கடல் மட்டம் நினைத்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உலகில் தற்போது மொத்தம் 150 மில்லியன் மக்கள் கடல் மட்டத்திற்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள். அதாவது இவர்கள் இருக்கும் பகுதி கடலில் உருவாகும் அலையின் உயரத்தை விட கீழே இருக்கிறது. இவர்கள் வாழும் பகுதி இன்னும் 30 வருடங்களில் மொத்தமாக கடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    மிக அதிகம்

    மிக அதிகம்

    இவர்கள் அதிகம் எச்சரிக்கை விடுத்து இருப்பது வியட்நாம் நாட்டைத்தான். அதன்படி 2050ல் தெற்கு வியட்நாம் மொத்தமாக கடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இடமாற வேண்டிய சூழ்நினை உருவாகும் என்று கூறியுள்ளனர்.

    இல்லை

    இல்லை

    அதிகரிக்கும் மக்கள் தொகை, புதிய காற்று மாசுபாடு பிரச்சனைகள் ஆகியவை இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை. அதை எல்லாம் கணக்கில் கொண்டால், இந்த கடல் பரப்பு அதிகரிப்பு இன்னும் வேகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அதேபோல் அரபிக்கடல் வேகமாக வளர்ந்து வருவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    கேரளா எப்படி

    கேரளா எப்படி

    அரபிக்கடல் நினைத்ததைவிட அதிகமாக நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது. 2050ல் பாதி மும்பை கடலில் மூழ்கி விடும். இன்னும் சில வருடங்களில் இதன் பாதிப்பு தெரிய துவங்கும். அரபிக்கடல் அதிகரிப்பால் கேரளா மிக மோசமாக பாதிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Half of the Mumbai will be vanished in Sea by 2050 says a shocking report.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X