மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீக்கியரின் தலைப்பாகையை தட்டிவிட்ட மேற்கு வங்க போலீஸார்.. இது நடந்திருக்க கூடாது தீதி.. ஹர்பஜன்சிங்

Google Oneindia Tamil News

மும்பை: சீக்கியரின் தலைப்பாகையை தட்டிவிட்ட மேற்கு வங்க போலீஸாருக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது ட்வீட்டை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டேக் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நேற்று பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. ஹவுராவிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீஸார் தண்ணீர் பீய்ச்சியும் அடித்தனர்.

போலீஸார் தடியடியும் நடத்தினர். அப்போது அந்த தடியடியின் போது சீக்கியர் ஒருவரை மேற்கு வங்க போலீஸார் தாக்கினர். இதையடுத்து போலீஸாரின் தடியடியை சீக்கியர் தடுக்க முயன்றார். எனினும் போலீஸ்காரர் லத்தியால் தாக்கினார். அப்போது அவரது தலைப்பாகையை போலீஸ்காரர் தட்டிவிட்டுவிட்டு தரதரவென இழுத்து சென்றாார்.

வைரல்

இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஏராளமான சீக்கியர்களும் குருமார்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்த இந்திரஜித் குண்ட்டு என்பவர், பல்வீந்தர் சிங்கின் தலைப்பாகையைத்தான் அவர்கள் தட்டிவிட்டனர். அவர் கையில் துப்பாக்கி ஏந்தியிருந்ததாக புகார் எழுந்தது.

மெய்க்காவலர்

மெய்க்காவலர்

பாஜக மாநில தலைவர் திலிப் கோஷின் தனி மெய்க்காவலர் பல்வீந்தர் சிங். மேலும் அவர் எம்பி அர்ஜுன் சிங்கின் உதவியாளரும் ஆவார் என தெரிவித்துள்ளார். பல்வீந்தர் சிங்கின் தலைப்பாகையை தட்டிவிட்டதோடு அவரது முடியை பிடித்து இழுத்ததாக போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வரே

போலீஸாரின் இந்த செயலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பொங்கி எழுந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது நடந்திருக்கவே கூடாது. இந்த விவகாரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் முதல்வரே என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை டேக் செய்துள்ளார் ஹர்பஜன்.

முன்னாள் ராணுவ வீரர்

முன்னாள் ராணுவ வீரர்

போராட்டத்தில் ஆயுதத்தோடு பங்கேற்றதால் தடியடி நடத்தியதாக போலீஸார் விளக்கமளித்துள்ளனர். இதுகுறித்து பல்வீந்தர் சிங் கூறுகையில், நான் எந்த அரசியல் கட்சியையும் சேராதவன், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர். நான் அங்கு போராட்டம் செய்ய வரவில்லை.

பாதுகாப்பு கொடுக்கும் பணி

பாதுகாப்பு கொடுக்கும் பணி

தற்போது பிரியங்கு பாண்டேவின் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளேன். அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியைத்தான் நான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நான் உண்மையை சொல்ல வருவதற்கு முன் என்னை கடுமையாக தாக்கினர் என பல்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

புண்படுத்துதல்

இதுகுறித்து மேற்கு வங்க போலீஸார் கூறுகையில் சம்பந்தப்பட்ட பல்வீந்தர் சிங் 9 எம்எம் பிஸ்டலை வைத்திருந்தார். அங்கு நடந்த மோதலில் அவருடைய தலைப்பாகை தானாக கீழே விழுந்துவிட்டது. போலீஸார் தலைப்பாகையை தள்ளிவிடவில்லை. எந்த மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல.

மதிப்பதுண்டு

மேற்கு வங்க போலீஸார் எப்போதும் அனைத்து மதங்களையும் மதிப்பர். பல்வீந்தர் சிங்கை கைது செய்வதற்கு முன்னர் போலீஸ்காரர், தலைப்பாகையை அணிந்து கொள்ளுமாறு பல்வீந்தரிடம் கூறியும் உள்ளார். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் போது அவர் தலைப்பாகையுடன் இருந்த புகைப்படம் இதோ என போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

English summary
Cricketer Harbhajan Singh condemns about disrespecting turban of sikh man and manhandled him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X